பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 யுகசந்தி ■ பெருங்கதை தோன்றிய காலத்தை ஒரு 'யுகசந்தி' எனலாம். மறுமலர்ச்சிக் காலம் ஒன்று சிலப்பதிகாரத்துக்குப் பின்னர்த் தோன்றியது. பழைய மரபில் ஒரு மறுமலர்ச்சி தோன்றிப் பாவின வகைகள் பெருகி, விருத்தப்பா வீறுபெறத் தொடங்கியது. விருத்தப்பாவின் மேதக்கவளத்தினை, திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணியில் காணலாம். இதற்கு முன்னர்த் தோன்றிய நூல்களில் அகவற்பா, வெண்பா, கலிப்பா என்னும் மூன்றுமே கையாளப்பட்டு வந்தன. சங்கநூற் பாடல்கள் பெரும்பான்மையும் ஆசிரியப் பாவிலும், நீதிநூல்கள் வெண்பாவிலும், கலித்தொகை போன்றவை கலிப்பாவிலும் இயற்றப் பட்டன. அகவற்பா தோன்றிய காலத்திற்கும், விருத்தப்பா தோன்றத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த நூல் பெருங்கதை. இதற்குப் பின்னர் எழுதப்பட்ட காவியங் களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் விருத்தப் பாடல்களையே காண்கிறோம். சித்திரக் கவி பிற்காலத்தெழுந்த பெருநூல்களில் 'சித்திரக் கவி' எனப்படும் மிறைக்கவிகள் இடம்பெற்றன. பாடல்களின் எழுத்துக்கள், நாகம், முரசம், கடகம், இரதம் போன்ற உருவங்களில் அமைத்தனர். புலமையின் அளவுகோலாகவும் இவ்வகைக் கவிகள் அக்காலத்தில் கருதப்பட்டன. சித்திரக் கவிகள் பாடுவது மெத்தக் கடினம் எனக் கருதப்பட்டது. இத்தகைய மிறைக் கவிகள் வடமொழியினின்றும் தமிழில் வந்து பரவத் தொடங்கின. காவியத்திற்கு வேண்டிய பல உறுப்புக்களில் சித்திரக் கவியும் ஒன்று என்பது வடநூற் கொள்கை. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய நாட்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படும் வடமொழிப் பெருங்கவிஞர் பாரவி, 'கிராதார்.ஜூனியம்' என்ற தம் நூலில் யமகம் திரிபு என்னும் தொடைகளை அமைத்துப் பாடினார். பலவகையான திரிபுகள் அமைந்த சித்திரக் கவிகளையும் இயற்றினார். ஒரு செய்யுள் முழுவதும் 'ந'