பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 என்ற ஒர் எழுத்தே வருமாறு பாடியுள்ளார். இவ் வருமைப் பாடு அந்நாட்களில் புலவரால் பாராட்டப் பெற்றது. வடமொழித் தண்டியலங்காரத்தில் சக்கர பந்தம், முரசு பந்தம், கோமூத்திரிகாபந்தம், சருப்பதோ பத்திரம் போன்ற ஏராளமான சொல்லணிகள் கூறப்படுகின்றன. இவை அனைத்தும் அமைந்த நூல் சிசுபால வதம். வட மொழியில் ஐம்பெருங்காவியங்களுள் ஒன்றெனக் கருதப்படும் lெருால் மாக கவியால் இயற்றப்பட்டுள்ளது. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தேவாரப் பாக்களில் யமகம் போன்ற திரிபுகளும் சொல்லணிகளும் படம் பெற்றுள்ளன. இக்கால நூல்களில் சிலேடைகளை அமைத்துப் பாடும் முறை பல்கலாயிற்று. இங்குக் குறிப்பிட்ட கவிவகைகள் தோன்றுவதற்கு முன்னரே பெருங்கதை தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் Wik ான சித்திரக் கவியோ, சிலேடை போன்றவையோ | மாலில் காணப்படவில்லை. சொல்லடுக்கி வித்தையைக் காட்டும் முறையை இவர் கையாளவில்லை. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களைத் தழுவி அகவற்பாவிலேயே தம் நூலை ஆக்கினார் என்ற ஒன்றே உளங்கொளத் தக்கது. எனவே, சிலம்பு, மேகலை ஆகிய இரு நூல்களையும் பெருங்கதையின் முன்னோடிகள் எனக் கூறுதல் பொருந்தும். _அகவற்பாவின் அருமை தொடர்நிலைச் செய்யுளாக அமைவதற்கு அகவற்பாவே பற்றது. படிப்பதற்கும் பாடுவதற்கும் எளிதாக இருப்பது தென் சிறப்பியல்புகளில் ஒன்று. சொல்லணிகள் ஒருவாறிருப் பினும் பொருளணிகளை அமைத்துக் காட்ட இப்பா மிகவும் சிறந்தது. பிற்காலத்தெழுந்த விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பாவினங்களில் பொருளணிகளை அமைத்துக் காட்டினர். இவை படித்துணர்வதற்குச் சற்றுக் கடினமாய் _ள்ளன. ஆனால், ஆசிரியப் பாவில் அமைக்கப்படும் _அணிகள், விளங்கிக் கொள்வதற்கு மிகவும் எளிதானவை. ஒரு கருத்தை அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறுவதற்கும் துெவே ஏற்றது. சங்கச் சான்றோரும் அருந்தமிழ்ப் புலமை