பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 அகலக் கவி சிலம்பும் மேகலையும் காதை என்னும் பகுதிகளைக் கொண்டன. பெருங்கதையும் அத்தகைய அமைப்பையே உடையது. ஒவ்வொரு நீண்ட அகவற்பாடலும் ஒரு காதை யாக அமைந்துள்ளது. முன்னையன கதைத் தொடர்பாகிய பொருள் தொடர்ச்சி மட்டுமே உடையவை. பெருங்கதை, இதில் மட்டும் சிறிது வேறுபடுகின்றது. பொருள் தொடர்ச்சியோடு அந்தாதி எனப்படும் சொல் தொடர்ச்சியும் இக்காப்பியத்தில் அமைந்துள்ளது. பெருங்கதையில் இப்போது கிடைத்துள்ள காதைகளின் மொத்தத் தொகை 99. இதன் சிற்றுறுப்புகள் காதை எனப் படும் வழக்குண்மையை முகவெழுத்துக் காதை, மனம்படு காதை என்ற இரண்டு சிற்றுறுப்புகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்களாலும், காண்டங்களின் இறுதியில், ஆகக் காண்டம் இத்தனைக்குக் கூடிய காதை இத்தனை என்ற குறிப்பு காணப்படுவதாலும் அறியலாம். கிடைத்துள்ள அகவற் பாக்கள், 35 அடிசிற்றெல்லையையும் 390 அடிபேரெல்லையை யும் உடையன.