பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 அம்மை அழகு தொன்மை தோல்விருந் தியைபு புலனிழை யெனவனப் பெட்டே" என்றாராகலின் என்பர். காரிகைக் கூற்றிலிருந்தும், அதன் உரையாசிரியர் கூற்றிலிருந்தும் அம்மை முதலானவற்றிற்கு வனப்பென்றும் ஒரு பெயருண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவர் மேலே காட்டிய நூற்பா எந்த நூலைச் சார்ந்தது என்று தெரியவில்லை. திருவள்ளுவமாலை எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு வழுக்கில் வனப்பணி வண்ணம் (45) என்ற பாட்டில் வனப்பையும் கூறியுள்ளது. மேற்கண்ட ஆராய்ச்சியிலிருந்து தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பா அம்மை முதலானவற்றைப் பொருந்தக் கூறிய எட்டு என்று புகல்கின்ற தென்பதும், யாப்பருங்கலம் என்னும் நூல் அம்மை முதலிய ஆயிரு நான்மையும்' என்று கூறுகின்றதென்பதும், அதன் உரையாசிரியர் 'யாப்பலங்காரம்' என்று அதனைக் கூறுகின்றாரென்பதும், காரிகையாசிரியர் வனப்பு என்று குறித்ததனை அதன் உரை யாசிரியர் வனப்பென்பது அம்மை முதலான எட்டென்று கூறி, அதற்குமேற்கோள் நூற்பாவொன்றும் தந்து விளக்கு கிறாரென்பதும் நமக்கும் புலனாகின்றது. இதன்பின், அம்மை முதலானவற்றிற்குத் தனித்தனி இலக்கணம் கூறும் நூற்பாக்களுக்கு வருவோம். முதலுரை யாசிரியராகிய இளம்பூரணர் செய்யுளில் முதல் நூற்பாவில் "பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறினோடு ஒரு நிகரன அன்மையின் வேறு தொகை கொடுக்கப்பட்டது. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துட் காட்டுவதும் என்று மட்டும் கூறியுள்ளார். அம்மை முதலான எட்டிற்கு யாப்பலங்காரம் என்றோ, வனப்பென்ற பெயரோ இருப்பதாக அவர் கூறவில்லை. அதுவுமன்றி அம்மை முதலானவற்றிற்கு இலக்கணம் கூறுபவர் தனித்தனி நூற்பாக்களிலும் குறிக்க வில்லை. அவர், அந்நூற்பாக்களின் முகப்பில் நிறுத்த முறை யானே அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற் JTDP,