பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 _அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று, தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று, தோலாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று, விருந்தென்னும் செய்யுள் உணர்த்து தஸ் நுதலிற்று, இயைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று, புலன் என்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று, இழையா மாறு உணர்த்துதல் நுதலிற்று என்றே எழுதிச் செல்கின்றார். இவ்வாறு அவர் கூறுவனவற்றில் யாப்பலங்காரம் என்ற பெயரோ வனப்பென்ற பெயரோ காணப்பெறவில்லை. _அவர் அம்மை முதலானவற்றிற்கெல்லாம் தனிச் செய்யுளையே மேற்கோளாக எடுத்துக்காட்டுவர். ஆனால், தொன்மைக்கு மட்டும் இராம சரிதமும் பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின் மேல்வரும் செய்யுள் என்பர். இவையும் நசிவினார்க்கினியர் புறத்திணையியலில் எடுத்துக்காட்டாகக் காட்டும் பாரதக் கதை பற்றி வந்த தனிப்பாடல்கள் போல் வனவற்றையும் குறிக்கலாம். எனவே இளம்பூரணர் உரையைக் கருதினால் அம்மை முதலிய எட்டும் தனிச்செய்யுளுக்கே ஒதிய இலக்கணம் என்பது புலனாகின்றது. இளம்பூரணர் கருத்தினையே யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியரும் காரிகை உரையாசிரியரும் கொண்டனர் என்பது அவர்கள் உரையால் நமக்குப் புலனாகின்றது. ஆனால் பேராசிரியரும், பெரும்பாலும் அவர் கருத்தைப் பின்பற்றியொழுகும் நச்சினார்க்கினியரும் இளம்பூரணர் கருத்திற்கு மாறுபட்டு, அம்மை முதலாயின பெரும்பாலும் தொடர்நிலைச் செய்யுள் வனப்பையும் சிறுபான்மை தனிச்செய்யுள் வனப்பையும் கூற வந்தன என்றே கருதிக் கொள்கின்றனர். பேராசிரியர் செய்யுளியல் முதற்பாவுரையிலேயே இக்கூறப்பட்ட எண்வகை வனப் பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறும் தொகுப்ப முப்பத்து நான்கு உறுப்பாம் என்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்கு (யார் கூறற்கு?) அவற்றைக் கூறும்வழிச் சொல்லு வதும் என்றனர்.