பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 அம்மை முதலானவற்றைத் தனித்தனி கூறும் நூற்பாவிற்கு இளம்பூரணர் முதலியோர் கருதும் உரை தொல்காப்பியர் அம்மை முதலான எட்டினைத் தனித்தனியே கூறும் நூற்பாக்கள், இளம்பூரணர் முதலான உரையாசிரியர்கள் உரையில் வெவ்வேறு பாடங்களுடன் காணப்படுகின்றன. இளம்பூரணர், "சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் வின்றே" என்று மூலபாடத்தை எழுதி, "சிலவாய மெல்லிய வாகிய மொழியினானே தொடுக்கப்பட்ட அடிநிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம்" என்றெழுதி அறிவினான் ஆகுவ துண்டோ என்றும் திருக்குறள் ஒன்றினை மட்டும் மேற் கோளாகக் காட்டியுள்ளார். | யாப்பருங்கல விருத்தியாசிரியர் "சின்மென் மொழியால் சீரிது நுவலின் அம்மை தானே அடிநிமிர் வின்றே" என்று பாடம் ஒதி, அம்மையானது சிலவாய மெல்லியவாய சொற்களால் ஒள்ளிய வாய பொருள்மேற் சில வடியாற் சொல்லப்படுவது என்று கூறி, அறிவினால் ஆகுவதுண்டோ, என்னும் பாட்டினையே எடுத்துக்காட்டுவர். காரிகை உரையாசிரியரும் யாப்பருங்கல விருத்தி ஆசிரியரைப் போலவே பாடம் கொண்டு அவர் போலவே உரையெழுதி எடுத்துக்காட்டும் காட்டியுள்ளார். o 鷹 பேராசிரியர், அம்மை இலக்கணம் கூறும் நூறபாவனை, "வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலடோ டம்மை தானே அடிநிமிர் பின்றே" என்று பாடம்கொண்டு, இவற்றை வனப்பென்று கூறுமா றென்னை? அச்சூத்திரத்துப் (முதல் நூற்பா) பெற்றில