பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 மாலெனின் வனப்பென்பது பெரும்பான்மையும் பல _றுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும், அதனால் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப் பகுதி வகையான் ஏற்பதென்பது. இனி இவற்றைச் சூத்திரத் _ா வனப்பென்னும் குறி எய்துவிக்க வேண்டுவானாகச் _ந்திரத்தை. "வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின்" ாண்பது பாடமாக உரைத்தானென்க. அதுவும் அறிந்தவாறே _அறிவித்தவாறே) கொள்க, என்றனர். ஆனால், நச்சினார்க்கினியர், "சின்மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தாமே அடிநிமிர் வின்றே" _று பாடமோதி, இந்நூற்பாவுரையில், இப்பெயர் வனப்பென்னும் பெயர்) சூத்திரத்தாற் பெற வேண்டுவார் வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியால்" _ளப் பாடமோதுப என்று கூறுவதைக் கருதினால், வனப்பியல் தானே வகுக்குங் காலை" என்பது பேராசிரியர் _ற்பித்துக் கொண்ட பாடம் போல் தெரிகிறது. அறிஞர் _பக. -Ի/ԱՐ«Մ, "செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே" _பது அழகினைச் சொல்லும் நூற்பாவாகும். இந்நூற் பாவிற்குப் பாடவேறுபாடில்லை. இளம்பூரணர் செய்யுள் மொழியால் என்பதற்குச் செய்யுட் சொல்லாய் என்பர். பாப்பருங்கல விருத்தியாசிரியரும் காரிகை உரையாசிரியரும் செய்யுட் சொல்லாகிய திரிசொல்லால்' என்பர். பேராசிரியர் 'வழக்குச் சொல் பயிலாமல் செய்யுள் பயின்றுவரும் சொல்லால்' என்பர். இளம்பூரணர் முதலிய மூவரும் 'துளயிரும்பரப்பாம் என்ற தனிப்பாடலைக் காட்டுவார்.