பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் நெடுந்தொகை முதலிய தொகை எட்டும் என்பர். தொன்மை "தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" மேற்காட்டியது இளம்பூரணர் கொண்ட பாடம் மற்று எல்லோரும் "தொன்மை தானே, உரையோடு புணர்ந்த பழமை மேற்றே" என்ற பாடமே கருதினர். இளம்பூரணர் தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவ சரிதமும், முதலாகியவற்றின் மேல் வரும் செய்யுள் என்பர். விருத்தி ஆசிரியர் தொன்மை யாவது பழைமைத்தாய் திகழ்ந்த பெற்றி உரைக்கப் படுபவனவற்றின் மேற்’ என்று கூறி, செறிதொடி உவகை கேளாய் என்பது போல்வனவும் பாரதமும் இராமாயணமும் கொள்க என்பர். காரிகை உரையாசிரியரும் அவ்வாறே எழுதி பாரதமும் காந்தமும் கொள்க என்றனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொன்மை என்பது உரை விராஅய்ப் பழைமையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது அவை பெருந்தேவனாராற் செய்யப்பட்ட பாரதமும் தகடுர் யாத்திரையும் போல்வன என்பர். நச்சினார்க்கினியரும் இவ்வாறே எழுதிச் சிலப்பதி காரமும் அது என்பர். தோல் "இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்னெறிப் புலவர்" இந்நூற்பாவிற்குப் பாடவேறிபாடில்லை. தோல் என்னும் பலபொருள் ஒரு சொல்லிற்கு வனப்பு என்ற "பேராசிரியர் வினாவிற்கு ஏற்ற விடையினைக் கூறவில்லை.