பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 பொருளும் உண்டு. (பிங்கல நிகண்டு). இந்நூற்பாவிற்கு இளம்பூரணரும், விருத்தி உரையாசிரியரும் காரிகை ைெரயாசிரியரும் இழுமென்மொழியால் விழுமியது நுவன்றதற்கு 'பாயிரும் பரப்பகம்’ என்னும் மாக் கண்டேயனார் காஞ்சிப் பாட்டும் அடிநிமிர்ந்தொழுகியதற்கு மலைபடுகடாம் பாட்டும் எடுத்துக்காட்டாகக் கூறுவர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மெல்லென்ற சொல்லால் அறம் பொருள் இன்பம் வீடென்னும் விழுப் புறம் பயப்பக் கொச்சகத்தாற் செய்வனவும் ஆசிரியப் பாட்டால் ஒரு கதை மேல் தொகுக்கும் பொருட்டொடர் நிலையும் தோல் ஆகும் என்பர். நச்சினார்க்கினியர் சிந்தாமணி, தேசிகப்பா இவற்றை எடுத்துக்காட்டுவர். விருந்து விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்று இளம்பூரணரும் விருத்தி உரையாசிரியரும் 'புதுவது 1னைந்த என்ற பாடமே கொண்டுள்ளனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் காரிகை உரையாசிரியரும் புதுவது கிளந்த என்று பாடம் ஒதுவர். இளம்பூரணர், விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய், புதிதாகச் சொன்ன யாப்பின் மேற்று என்பர். விருத்தியுரை ஆசிரியரும் காரிகையுரையாசிரியரும் விருந்து என்பது புதியவாயினவற்றின் மேற்று அவை இப் பொழுதுள்ளாரைப் பாடுவது என்பர் பேராசிரியரும், நச்சி வார்க்கினியரும் விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப் படும் தொடர்நிலைச் செய்யுள்மேற்று என்று கூறி முத்தொள்ளாயிரம் அந்தாதி கலம்பகம் முதலானவற்றைக் சாட்டுவர். Զ)vծաւլ ஏகார முதலா ளகார வீற்றுப் புள்ளி யிறுதி இயைபெனப் படுமே