பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இளம்பூரணர் இதற்கு எழுதிய உரையினைக் கருதாமல் ஏடு எழுதியவர் 'னகார வீற்று' என்று பாடம் கொண்டனர். அது ஏடு எழுதுவோரால் நிகழ்ந்த பிழையாகும். ஏகார முதலா ளகார வீற்று' என்பது இளம்பூரணர் கொண்ட பாடமாகும். மற்ற எல்லோரும் ஞாகாரை முதலா ளகாரை யீற்று என்று பாடம் கொண்டுள்ளனர். இளம்பூரணர் ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வரும் செய்யுள் இயை பென்னும் செய்யுளாம் என்று கூறி உதாரணம் வந்தவழிக் «55/T&TT]Те95 6TORTTLJFT. விருத்தியாசிரியர் இயைபு என்பது ஞணநமன யரலவழள எனப்பட்ட பதினொரு புள்ளியும் ஈறாய் வந்த ... பாட்டெல்லாம் அவை பதினோருதாரணமும் வந்தவழிக் கண்டு கொள்க என்றனர். காரிகையுரையாசிரியரும் அவ்வாறே கூறுவர். பேராசிரியர் இயைபு என்றதனால் பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் கருத்து. மணிமேகலை யும் கொங்குவேள் மாக்கதையும் போல்வன னகாரை ஈற்றால் வந்தன என்பர். புலன் 'தெரிந்த மொழியால் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிப் புலனென மொழிப புலனுணர்ந் தோரே' மேல் நூற்பாவிற்கு இளம்பூரணரும், விருத்தியுரை யாசிரியரும் காரிகையுரையாசிரியரும் கொண்ட பாடம், "தெரிந்த மொழியால்" என்பதாகும். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம் 'சேரி மொழியால்' என்பதாகும். இளம்பூரணர் வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமல் பொருள் தோன்றுவது புலன்' என்பர். அதற்கு அவர் காட்டும் உதாரணம் பாற்கடல்' என்ற பாட்டாகும். விருத்தியுரை ஆசிரியரும் காரிகையுரையாசிரியரும், இயற்சொல்லால்