பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கற்பனை என்றால் என்ன? என்னும் கேள்விக்கு இலகுவில் விடை கூறிவிடல் முடியாது. கவிதைகளிலே கற்பனை துலங்கும் சந்தர்ப்பங்களைக் காட்டலாம். கற்பனையின் தொழிற்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் கூறலாம். ஆயினும் கற்பனைக்கு வரைவிலக்கணம் கூறுவது எளிதன்று. பொதுவாகக் கூறுமிடத்து நமது அனுபவங்கள் ஐம்புலன்களை அடிப்படையாகக் கொண்டவை. அவ்வனுபவங்கள் வாயிலாக வரும் அறிவைப் புலனுணர்வு அல்லது புலப்பாடு என்பர். புலன்கள் மூலமாகவன்றி, கருத்தளவிலும் ஒரு பொருளை எண்ணி அனுபவிக்கக் கூடிய நிலையும் உண்டு. அதுபற்றி வரும் அறிவைக் கருத்துப் பொருளுணர்வு என்பர். பின்னதாகிய கருத்துப் பொருள் உணர்வின் செறிந்த உயர்நிலையினையே கற்பனையாற்றல் என்கிறோம். இவ்வடிப்படைக் காரணத்தினால் கற்பனை என்பது இல்லாதது ஒன்றைக் கட்டாகக் கூறுதல் என்று பொருள்படும். பொருள்களுடன் நிகழ்வுகளும் சாதாரணமாகப் புலன்களுக்கு இடமானவை யாதலால், அவற்றையே மெய்ம்மை என்பது இயல்பாகி விட்டது. புலன்களைச் சாராமலும் உணர்வானது பொருள்கள் பற்றியும் நிகழ்ச்சிகள் பற்றியும் தோன்றுமாயின் அவற்றை உண்மைக்குப் புறம்பானவையாகக் கொள்ளுதலும் இயல்பாகி விட்டது. இயற்கை உணர்விற்குப் புறம்பான வற்றை மன உணர்விற்கு இடமானவையாகப் படைப்பதே கற்பனையாற்றல், இலக்கியத்தைப் பொறுத்த வரையில், நிகழாதது ஒன்றை நிகழ்ந்தது போலச் சிருட்டிப்பது கற்பனை என்று கருதப்படுகிறது" என்பர். (கவிதை நயம் - கற்பனையின் பாங்கு - 34-35 பக்.) அவர் ஆராய்ந்தாற் போல நாமும் கற்பனையைப் பற்றி ஆராய்வோம். கற்பனை மாலையம் பொழுது நிகழ்கிறது. அப்பொழுது நாம் வேலி யோராமாக நடந்து கொண்டிருக்கிறோம். ஒரு வளைந்த உருவம் நம்கண்ணுக்குப் புலப்படுகிறது. அதனைப்