பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 இச்சொல் நெஞ்சொடு புணர்த்தும், சொல்லா மரபின வற்றொடு பொருந்தியும், அவரவர் உறுபிணி தம்போற் சேர்த்தியும், உவம வாயிற்படுத்தும் வரும். நெஞ்சொடு புணர்த்தல் உடம்பு, சொல், உள்ளம் என்னும் மூன்று கருவிகளில் உள்ளம் என்னும் நெஞ்சு நமக்கு ஒரு கருவியாகும். அந்நெஞ் சத்திற்கு உறுப்பு இருப்பது போலவும், தனியாக உணர்வு இருப்பது போலவும் நாம் சொல்வதை மறுத்து உரைப்பது போலவும் இலக்கியங்களில் கூறப்படுவதுண்டு. இது நெஞ் சோடு புணர்த்துக் கூறும் இலக்கணத்தில் பக்கச் சொல்லாகும். கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிட் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரைத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே (அகநானூறு -19) இப்பாட்டில் நெஞ்சிற்குக் கைமுதலான உறுப்புக்கள் இருத்தல் போல வைத்து தலைவனின் வரவைக் கருதி மாலையம் பொழுதில் மனையகத்து நின்றிருந்த தலைவியின் பின் அவளறியாமல் கைகவித்துக் கொண்டு சென்று அவளுடைய கண்ணைப் புதைத்துக் கொண்டு குறுகி சடைப்பின்னலுடன் கூடிய தலைவியின் முதுகைத் தீண்டி, அவள் தொடியணிந்த கையைத் தடவிப் பார்த்து உணரு மாறு அவளுடன் கூடிற்றோ என வினைமுடித்துத் திரும்பிவரும் தலைவன் பாகனொடு கூறுவது போல் உவப்பு என்னும் மெய்ப்பாடு தோன்றிப்பாட்டு புனைந்து கூறுகிறது. இதனை இக்காலத்தார் கற்பனை என்று பெயர் வைத்தழைக்கின்றனர். குறுநிலக் குரவின் சிறுநனை நறுவி வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறுஉங் கவின்பெறு காலை அல்வளை நெகிழ்த்தோர்க்கு அல்லல் உlஇச்