பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 சென்றஎன் நெஞ்சம் செய்வினைக்கு உசாவாய் ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ? அருளா னாதலின் அழிந்திவண் வந்து தொன்னலன் இழந்தஎன் பொன்னலம் நோக்கி ஏதிலாட்டி இவளெனப் போயிற்று கொல்லோ நோய்தலை மணந்தே (நற்றினை - 56) இப்பாட்டு, வரைவிடை வைத்துப் பொருள்தேடப் பிரிந்த தலைமகனைக் கருதித் தலைவி மெலிய, மெலி காற்றுவிக்குந் தோழிக்கு அவள் கூறியது. குறிதாக வளர்ந்து நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்புடன் கூடிய நறுமணமுள்ள மலரில் வண்டு சென்று வண்டி வெளிப்படுத்தும் மணத்தோடு காற்று கலந்து மருதலால், இக்காட்சியைக் கண்டவர்தம் கண் களிப்பினைப் பெறும் அழகிய இக்காலத்திலே, ஒளிபெற்று வளையை நெகிழ்த்தோர்க்கு அல்லல் உற்று அவரிடம் சென்ற என் நெஞ்சம், அவர் செய்யும் வினைக்கு உசாத்துணையாய் அவரிடம் தங்கியிருந்து, அவரோடு ஒருங்கு வருதலை விரும்பி என் துன்பத்தையும் கருதி வருந்தியிருக்குமோ? அல்லது, சென்ற என் நெஞ்சை அத்தலைவர் அக் குறையைக் கேட்டு அருளாமையால் உள்ளம் அழிந்து என்னை நாடி இவண் வந்து பழைய நலத்தை இழந்து பிர்க்கம் பூப்போன்ற நிறத்தைப் பெற்று மாறுபாடடைந்த என்னை நோக்கி அடையாளம் தெரியாமையால் இவள் வேறொருத்தி போலும் என்று கருதிக் கொண்டு, என்னைத் தேடிக்கொண்டு தாங்கருந் துன்பத்துடன் வேறிடம் சென்றுவிட்டது போலும்" என்று கூறுகிறாள். இங்கே நெஞ்சத்திற்கு நசை, வருத்தம், நோயொடு கூடல் முதலான _னர் விருத்தலாகக் கூறப்பட்டுள்ளன. இப்பாட்டில் ()ளிவரல் என்னும் மெய்ப்பாடு அமைந்துள்ளன. புலவன்றன் நாடக வழக்காகிய புனைந்துரை மிகச் சிறப்பாக இப்பாடலில் பொருந்தியுள்ளது. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது