பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 இன்னும் சில நாடக வழக்கு தலைமகன் வினைகருதிப் பிரிவான். அப்பொழுது தலைவி நிறம் மாறுபட்டுப் புலம்புவாள். அத்தகைய நிலையில் தலைமகள் வாயில் சில சொற்கள் வரும். அது எத்தகைய சொல் என்றால் தனிமை வருத்தத்தைத் தன் அக உறுப்பும் புறவுறுப்பும் உணர்ந்துள்ளன போல் பொருந்தக் கூறுவாள். எடுத்துக்காட்டாக, தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் தலைவனைப் புணர்ந்த காலத்தே பூரிப்பால் மிகப்பருத்த தோள் அவன் பிரிந்த காலத்தே வாட்டத்தால் மிகவும் வாடி அவன் பிரிந்து வெகுகாலம் ஆயிற்று என்பதை அறிவிப்பன போலும் என்ற குறட்பாவில் அறியலாம். இது அகவுறுப்பு. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மிலும் முன்னம் உணர்ந்த வளை இது புறவுறுப்பு. இது ஒரு நாடக வழக்கு உண்ணுதற் றொழிலுக்கு உரியவல்லாத பொருளை உண்ணுதல் தொழில் செய்வனவாகக் கூறுவதும் உண்டு. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவை என்னைத் தின்னும் அவர்க்கான லுற்று மனமே நீ தலைவனிடம் செல்வையாயின் உனக்கு வாயிலாகிய கண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு செல், ஏன் என்றால்? இக்கண்கள் தலைவனைப் பார்க்க வேண்டும்; பார்க்க வேண்டும் என்று என்னை பிடுங்கித் தின்கின்றன" என்று கூறுவது ஒருவிதமான நாடக வழக்காம்'இவ்வழக்கு உலக வழக்கிலும் பயின்று வருகின்றது. புனைந்துரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும் சிறியதனைப் பெருக்கிச் சொல்லு தலுமென புனைந்துரை இருவகைப்படும் என்பர். அவர்காட்டும் நூற்பா.