பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 உரைக்கப் படும்பொருட் கொத்தன எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரையாகும் என்பதாம். அயிர்ப்பாகு நோக்குவேன் கண்டேன் மயிர்ப்பாகில் பாகத்திற் பாகம் நுசுப்பு இது பெரியதனைச் சுருக்கிற்று. பொன்மலி கூடல் பூமலி கச்சி மாரி ஈகை மணியணி மாடம் இது சிறியவற்றைப் பெருக்கின. கற்பனை ஒன்றை மற்றொன்றாக வழங்குவது கற்பனை என்றால், உருவகமும் தற்குறிப்பேற்றம் முதலிய சிலவே கற்பனையாக வேண்டும். அங்ங்னமின்றிச் சுவைபடச் சொல்வனவெல்லாம் கற்பனை எனில், "நாடக வழக்காவது சுவைபட வருவன வெல்லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுவதே" என்று இளம்பூரணர் கூறும் கூற்றின்படிக் கற்பனை என்பது நாடக வழக்காதல் வேண்டும்.