பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பாடுபொருள் ஒரு பாட்டிற்குப் புற அமைப்பென்றும் அக அம்ைப்பென்றும் இருவகை அமைப்பு உண்டு. சொற்களை விழுமிதாக எடுத்துக் கையாளும் முறை, தொடை யமைப்பு முறை, அசையாலும் சீராலும் ஒசைபெற அமைக்கும் முறை, எழுத்து முதலானவற்றால் பலவகை வண்ணம் படைக்கும் முறை, எடுத்துக்கொண்ட பொருளை ஆற்றுநீர்ப் பொருள் கோள் முதலான பொருள்கோள் வகையில் அமைத்துச் சொல்லும் முறை உவமை முதலான அணி தோன்றச் செய்யும் முறை என்னும் இவை போன்றன வெல்லாம் ஒரு பாட்டின் புற அமைப்பாகும். பின்னர் அப்பாட்டில் மக்கள் வாழ்வில் நிகழ்வதற்குரிய பொருளைப் படுபொருளாக வைத்து, பொருள் நிகழ்ச்சிக்குத் தகுதியான மெய்ப்பாடு கற்பவர்க்குத் தோன்றுமாறு பாடுவது ஒரு பாட்டின் அக அமைப்பாகும். == ஒரு பாட்டிற்கு இவ்வாறு இரண்டுவகை அமைப்பு உண்டு என்பதை, பெறுவது கொள்வர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல் - மற்றும் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும் அறிதற் கரிய பொருள் (நாலடியார் 37) என்னும் பாட்டு கூறுகின்றது. "பொருள் கொடுப்பவரை வற்றுக்கொள்ளும் பரத்தையர்தம் அழகமைந்த தோள் போல, புறநெறி அமைப்பெல்லாம் அழகியதாக அமைந்து, கற்பவர்தம் உள்ளத்தை எல்லாம் எளிதாகக் கவருகின்ற ாலானது, அப்பரத்தையர்தம் அரிதற்கரிய உள்ளம்போல, _ாதற்கரிய உட்பொருளை உடையதாக இருக்கும்" என்று நூலின் இருவகை அமைப்பு கூறப்படுகிறது. உளவியற் கூறாகிய மெய்ப்பாடு கற்பவர்க்குத் தோன்றுமாறு பாடுபொருள் அமைப்பு இருக்க வேண்டும். கற்பவர்க்கு மெய்ப்பாட்டினைப் பாட்டு வழங்காதாயின்,