பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சிவஞான முனிவருக்கு இளம்பூரணரைப்பிடிப்பதில்லை. அதனால், அவர் தாம் எழுதிய தொல்முதற்குத்திர விருத்தியில் தமிழ்நூல் ஒன்றேவல்ல உரையாசிரியர் என்று இளம்பூரணரைக் குறிக்கின்றார். இவர் கூற்றிலிருந்து இளம்பூரணர் தமிழ் நூலில், தமிழிலக்கியங்களில், தமிழ் மரபறிவதில் வல்லவர் என்பது நமக்குப் புலனாகின்றது. தொல்காப்பியர் தம் நூலுள் பொருட்படலத்தே முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை (அகத்திணையியல் - 2) என்று ஒரு நூற்பா கூறியுள்ளார். இந்நூற்பாவை நன்கு கருதினால், தமிழ்நாட்டில் இலக்கியத் திறனாய்வு என்ற பெயரால் பழைய காலத்தில் நூல்கள் ஒன்றும் எழாமலிருந் தாலும், இலக்கியத்தில் வந்துள்ள பொருள்களைப் பாகுபாடு செய்யும் முறை தமிழ் நாட்டில் முன்பே இருந்து வந்தது என்னும் உண்மை நமக்குப் புலனாகின்றது. இவ்விலக்கண நூற்பா திறனாய்வு வகையுள் பகுப்பு முறைத் திறனாய்வு முறை பற்றிப் பாடலுள் வந்துள்ள பொருள்களைப் பகுக்கின்றது. தொல்காப்பியரோ அவர்கள் முன்பிருந்த இலக்கண ஆசிரியரோதமிழிலக்கியப் பாடல்களையெல்லாம் நன்கு நாடினார்கள். நாடியபொழுது பாடலுள் பயின்று வந்துள்ள பொருளெல்லாம் முதல், கரு, உரி என்ற மூன்று பகுப்பில் அடங்கும் என்பதையும் அம்மூன்றுள் முதலில், கருவும் உரியும் சிறந்தன என்பதையும் கண்டனர். தொல்காப்பியர் நாடுங்காலை என்று ஈண்டு கூறுவதையும் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி" என்று பாயிரத்தில் வருவதையும் தொல்காப்பியத்துள் பிறப்பியலில் "நெறிப்பட நாடி" (1) என்றும், அகத்தெழு வளியிசை அளில்தப நாடி" (20) என்றும், "வழக்கியல் மருங்கின் உணர்ந்தவர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்" (77) (குற்றியலுகரப் புணரியல்) என்றும், உரியியலில் "முன்னும் பின்னும் வருபவை நாடி"(93) என்றும், அகத்திணையியலில்" என்றிவை எல்லாம்