பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 இயல்புற நாடிய” என்றும், " உணர்திற நாட்டம் கிழவோன் மேன" (46) என்றும், மெய்ப்பாட்டியலில் " தவத்தக நாடில்" ) என்றும் செய்யுளியலில் ஒப்பநாடி உணர்தல் வேண்டும்" 112) என்றும், " செய்யுள் மருங்கில் மெய்பெற நாடி, ைெழத்த இலக்கணம்" (236) என்றும் மரபியலில் "புணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே" (101) என்றும் " சொல்லிய வகையால் சுருங்க நாடி" (12) என்றும் கூறுவனவற்றை யெல்லாம் கருதுக. இவர் ஆராய்தல் என்று பொருளில் தேடுங்காலை, நினையுங்காலை என்பது போன்ற சொற்களை எடுத்தாண்டுள்ளாராயினும் இந்நாடல்போல் ஏனைய சொற்களை மிகுதியாக எடுத்தாள வில்லை. நாடல் _றால் பலவிடங்களில் வந்துள்ள பொருளையெல்லாம் தேடித் தொகுத்தலாகும் " நாடலும் தேடலும் தேட வாகும்" என்பது பிங்கல நிகண்டு. தொல்காப்பியரும் பிறரும் பாட்டிலுள்ள பொருளையெல்லாம் தேடி அவற்றை முப்பொருளாகத் தொகுத்தார். முப்பொருளில் முதற்பொருள் முதல் கரு உரி என்ற முப்பொருளில் முதற் பொருளை நிலமும் காலமும் என்ற இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றனர். lெத நிலமும் காலமுமாகிய இரண்டினைத் தொல்காப்பியர் அகத்திணையியலிலன்றி முன்னர் வேற்றுமை மயங்கியலிலும் பின்னர் செய்யுளியலிலும் குறிப்பிடுகின்றார். ஆசிரியர் சொல்லுக்குக் காரணமானவற்றையெல்லாம் வேற்றுமை மயங்கியலில் தொகுத்து, வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்றா இன்னதற்கு இதுபயன் ஆக என்னும் அன்ன மரபின் இரண்டொடும் தொகை, ஆயெட் டென்ப தொழின்முத னிலையே (29) _ாட்டாகக் கூறியுள்ளார். அவ்வெட்டுள் இரண்டாக நிலமும் காலமும் ஒதப்பட்டுள்ளன. பின்னர் செய்யுளியலில் செய்யுட்கு உறுப்புக்களைக் கூறும் முதல் நூற்பாவிலும் -II