பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 'கலனே காலவகையெனா என்று உறுப்பாக ஒதி, அக்களன் இன்னதென்பதைச் சிறப்புச் சூத்திரங்களால், ஒரு நெறிப் பட்டாங் கோரியல் முடியும் கரும நிகழ்ச்சி இடமென மொழிப (193) என்றும், இறப்பே நிகழ்வே எதிர தென்னும் திறத்தியல் மருங்கின் தெரித்தனர் உணரப் பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும் என்றும் கூறியுள்ளார். மேற்காட்டியவற்றால் இடமும், காலமும் என்பன, உலகில் நிகழும் எல்லாத் தொழிலுக்கும் தொழில் முதனிலை என்ற காரணப்பொருளாக இருக்கும் என்பதும், அவற்றுள் இடம் என்பது புலவன் பாடும் கருமம் நிகழ்வதற்கு இடமா யிருக்கும் என்பதும், அவற்றுள் காலம் என்பதும் புலவன் பாடும் கரும நிகழ்ச்சி என்றும் பொருள் நிகழ்ச்சி இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்றும் முக்காலத்தில் எந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்பதைக் காட்டுவதாயிருக்கும் என்பதும் போந்தன. அத்தகைய நிலமும் காலமுமே பாடலும் பயின்ற முப்பொருளில் முதல் என்று பெயர் கூறப்பட்ட பொருளாய், அகத்தினை புறத்தினை நிகழ்ச்சிக்கு இடமாயிருக்கின்றன. நிலநூல் வல்லவர் நிலத்தை அதன் தன்மை கருதிப் பல கூறாகப் பகுப்பர். இலக்கியம் படைக்க வந்த புலவரும் தமிழகத்தில் காடு செறிந்த பகுதியைப் பிரித்து அதற்கு முல்லை என்றும், மலையுள்ள பகுதியைப் பிரித்து குறிஞ்சி என்றும், இனிய புனல் பாய்ந்து வளஞ்செய்யும் பகுதியைப் பிரித்து மருதமென்றும், கடற்கரை ஓரத்தில் அலை கொழித்து மணல் திரண்ட பகுதியைப் பிரித்து நெய்தலென்றும் அழகான பெயர் வைத்து வழங்கலாயினர். தொல்காப்பியர் காலம் பொழுது என்னும் பொதுச் சொற்களையும் யாண்டு, திங்கள், நாள் இமை, நொடி, மாத்திரை என்னும் சிறப்புச் சொற்களையும் எடுத்தாண்