பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 1ள்ளனர். இச்சொற்களுள் காலம் என்ற சொல்லையே |வர் மிகுதியாகத் தம் நூலில் ஆள்கின்றார். மேலும் அவர் வினவியாக்கத்தே காலம் உலகம் என்ற நூற்பாவில் காலம் என்பது உயர்தினைச் சொல்லாயினும் அது வழக்கில் அஃறிணைப் பொருளைக் கூறுவது போன்று வரும் என்று _றுகின்றார். காலம் என்பதை உயர்தினைப் பொருளாகக் கருதிய கருத்தினால்தான் அதனைத் தெய்வ உயர்திணை ாகக் கருதி, திவாகரம் முதலிய நிகண்டாசிரியரெல்லாம் காலம் பற்றிய எல்லாப் பெயர்களையும் தெய்வப் பெயர்த் தொகுதியில் வைத்துக் கூறியுள்ளனர். தொல்காப்பியர் சிறப்புக் காலத்துள் யாண்டினை எடுத்துக்கொண்டு ஆறாகப் பிரித்து பாலை குறிஞ்சி _றும் முத்திணைக்கு உரிமை செய்கின்றார். ஒர் நாளை படுத்துக்கொண்டு அதனையும் ஆறாகப் பிரித்து ஐந்து னைக்கும் உரிமை செய்கின்றார். உரிமை செய்யும் வகை தொல்காப்பியர் கருத்துப்படி முல்லைக்குச் சிறந்தன ார் காலமும், மாலையும் ஆகும். குறிஞ்சிக்குச் சிறந்தன பெரும்பொழுதுள் கூதிரும், முன்பனியும், சிறுபொழுதும் நடுமாமமும் ஆகும். பாலைக்குச் சிறந்தன பெரும்பொழுதுள் பின்பணியும், இளவேனிலும், முதுவேனிலும், சிறுபொழுதுள் நண்பகலும் ஆகும். மருதம் நெய்தலுக்குப் பெரும்பொழுதும் வரையறை யில்லை. மருதத்திற்குச் சிறுபொழுது வைகறையும் விடியலும், நெப்தலுக்குச் சிறுபொழுது எற்படு காலை எல்லாத் திணைக்கு எல்லாக் காலமும் உரியதேனும் சிறப்புப் பற்றி பன்ன திணைக்கு இன்ன பொழுது உரியது என உரிமை செய்துள்ளார் தொல்காப்பியர். பாலைக்கு மட்டும் பெரும் பொழுதில் மூன்று உரித்தாக இருத்தலைக் கருதினால் பாலைத்திணையின் பெருமை நமக்குப் புலப்படும். பழைய ாலத்திலே மக்கள் தங்கள் மனைவியைப் பிரித்து வேறிடத் |குத் தொழில் செய்யச் செல்வர். அக்காலம் மாசி பங்குனியாகிய பின்பiனிக் காலமும், சித்திரை வைகாசியாகிய வெவேனிற் காலமும், ஆனி ஆடியாகிய முதுவேனிற்