பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 உலகவழக்கு மொழி உலக வழக்கில் அண்டைநாட்டு மொழிகளும் சேய்மை நாட்டு மொழிகளும் வந்து வழங்கும். அவை பெரும்பாலும் பெயர்ச் சொற்களாகவே இருக்கும். அவை தமிழில் வந்து வழங்கும் போது தமிழிலக்கண முறையில் வேற்றுமை உருபு முதலானவைகளை ஏற்று இடம், பால், திணைகளை அறிவித்து நிற்கும். செய்யுள் வழக்குமொழி அதுபோலச் செய்யுள் வழக்கிற்கு வரும் சொற்களைத் தொல்காப்பியர், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (சொல்லதிகாரம் - 291) என்று கூறியுள்ளார். இந்நூற்பாவுரையில் இளம்பூரணர் இயற்சொல் என்பது தமிழ்வழங்கு நாட்டு விகாரமின்றி தமிழியற்கை இலக்கணப்பாடு செவ்வனுடைய சொல். திரிசொல் என்பது செய்யுளின்பம் நோக்கி அவ்வியற் சொற்களை அவ்வாய்பாடு திரித்து வேறு வாய்பாட்ட வர்க்கும் செய்யுளுடைய சொல். திசைச்சொல் என்பது செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த திசை நாட்டார் வழங்கும் சொல். வடசொல் என்பது ஆரியச் சொற் போலும் சொல். திரிசொல். செய்யுட்கே உரியன. ஒழிந்த மூன்றும் வழக்கிற்குரியவாகிச் செய்யுட்கும் புகும் என்பர். செய்யுளுக்கு வழக்குமொழி செய்யுளியலில் செய்யுளுக்கு உறுப்பாக ஒதப்பட்ட வற்றில் மரபு என்பதும் ஒன்று. அதனை, மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். அந்நூற்பா உரையும் இளம்பூரணர் "மரபாவது தான் இயற்சொல் திரிசொல்