பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு சொல்லின் இயற்கையாலே யாப்பின் வழிப்பட்டது" என்று பொழிப்புரை கூறி, இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தோடு பொருந்துதல், திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்தும் பல்வகை நாட்டிலும் தத்தமக் குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொல் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொல் மரபாவது திரிந்த வகையாகிய சொல் மரபு. யாதானும் ஒரு செய்யுள் செய்யுங் காலத்துப் பொருள் உணர்த்தும் சொற்கள் இவையாதலின், இவை ஒருபொருட்குரித்தாகிய ஆண் பெயரும் பெண்பெயரும் குழவிப் பெயரும் முதலாயின பிறபொருட்கள் வாராமையான் அவற்றை அவ்வம் மரபினாற் கூறுதலும், ஒருமை பன்மை மயங்காமையும், பெயரும் வினையும் முடிவுபெறக் கூறுதலும் வேண்டுதலின் இவ்விலக்கணமும் கூறல் வேண்டிற்று" என்பர். இருவகை வழக்கிலும் சொற்கள் திரிந்து வழங்குதல் மொழிகளில் சொற்கள் தோன்றினால் அது தோன்றிய வடிவத்துடனேயே இருப்பதில்லை. காலம் செல்லச் செல்ல அச்சொற்கள் திரிந்துவிடுகின்றன. தொல்காப்பியர் சொல்திரிபைச் செய்யுள் திரிபென்றும், உலக வழக்குத் திரிபென்றும் இரண்டுவகையாகக் குறிப்பிடுகின்றார். கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் என்பது அவர் கூறும் குறிப்பாகும். செய்யுள் திரிபு இயற்சொல் முதலிய நான்கும் செய்யுளுள் திரிந்துவரும் எனபதை, அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொடுக்கும்வழித் தொகுத்தலும்