பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர் (எச்சவியல் - 7) என்னும் நூற்பாவாலும், குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் குறைத்தன வாயினும் நிறைப்பெய ரியல (எச்சவியல் - 57) என்னும் நூற்பாவாலும் உணர்ந்து கொள்ளலாம். உலகவழக்குத் திரிபு சொல் முன்பின்னாக மாறி வழங்கும் (இல் முன் என்பது முன்றில் என வழங்குவது) மரூஉ முடிபும், ஒன்றும் பலவுமாகிய எழுத்துக்கள் குறைந்தும் விரிந்தும் வரும் மரூஉ முடியும் அவையல் கிளவியை மறைத்துக் கூறும் இடக்கரடக்கலும் மங்கலம் அல்லாததை மங்கலமாகக் கறும் மங்கலமொழியும் சில குழுவினர் தங்களுக்குள் வழங்கிக் கொள்ளும் குழுக்குறியும் முதலான திரிபெல்லாம் உலகியல் வழக்குத் திரிபாகும். தொல்காப்பியர் உலகவழக்குத் திரிபினைத் தம்நூலுள் எழுத்ததிகாரத்தே புணரியல் 9ஆம் நூற்பா, தொகை மரபு 30ஆம் நூற்பா, உயிர்மயங்கியல் 48, 49ஆம் நூற்பா, புள்ளியமங்கியல் 60ஆம் நூற்பா, குற்றியலுகரப் புணரியல் 75, 77ஆம் நூற்பாக்களிலும், சொல்லதிகாரத்தே கிளவியாக்கத்தின்கண் 17, 27, 38,50 என்னும் நூற்பாக்களிலும், பெயரியல் 11ஆம் நூற்பாவில் "கூடிவரும் வழக்கின் ஆடியற் பெயர்" என்னும் தொடராலும், இடையியல் 22ஆம் நூற்பா, எச்சவியல் 4, 46, 47ஆம் நூற்பாக்களிலும், பொருளதிகாரத்தே அகத்திணை 57ஆம் நூற்பா, பொருளியல் 21, 22ஆம் நூற்பாக்களிலும் கூறிச் செல்கின்றார். அவர் செய்யுள் வழக்கிற்குரிய விதிகளை எழுத்ததிகாரத்தே மொழிமரபு 18, 19 ஆம் நூற்பாக்களிலும், உயிர்மயங்கியல் 11, 35, 56, 86ஆம் நூற்பாக்களிலும் புள்ளி மயங்கியல் 10, 61, 76 ஆம் நூற்பாக்களிலும் குற்றியலுகரப்