பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புணரியல் 76ஆம் நூற்பாவிலும் சொல்லதிகாரத்தே கிளவியாக்கத்தில் 18, 39, 51ஆம் நூற்பாக்களிலும் வேற்றுமையியல் 14ஆம் நூற்பாவில் தெரிந்து மொழிச் செய்தி என்னும் தொடரிலும், பெயரியலில் 41, 42, 43ஆம் நூற்பாக்களிலும், வினையியல் 14ஆம் நூற்பாவிலும் எச்சவியல் 1ஆம் நூற்பாவிலும் பொருளதிகாரத்திலே அகத்திணையியல் 3,56ஆம் நூற்பாக்களிலும் பொருளியலில் 21ஆம் நூற்பாவிலும், மரபியல் 92ஆம் நூற்பாவிலும் கூறுகின்றனர். தொல்காப்பியர் தம் நூலுள் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணங்களை உலக வழக்கிற்கே உரியனவாகவும், செய்யுள் வழக்கிற்கே உரியனவாகவும், இரண்டு வழக்கிற்கும் பொதுவாய் உரியனவாகவுமென மூன்று பகுப்புள் அடங்குமாறு கூறியுள்ளார். ஆனால் பொருளதிகாரத்தே செய்யுளியலில் கூறுவனவெல்லாம் செய்யுள் வழக்கிற்கே உரியனவாகும். தொல்காப்பியர் செய்யுளியல் தொடக்கத்தே மாத்திரை முதல் வண்ணம் ஈறான யாப்பியல் வகையின் உறுப்பு இருபத்தாறினை முன்னே கூறி அம்மை முதலான வனப்பு எட்டொடும் அவற்றைச் சேர்ந்து இம்முப்பத்து நான்கும் செய்யுள் உறுப்பு என்றனர். ஆனால், பிற்காலத்து யாப்பிலக்கண நூல் செய்த ஆசிரியரெல்லாம் மிகக் குறைவாக எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறினைமட்டும் செய்யுள் உறுப்பென்று செப்பியுள்ளனர். அவர்கள், தொல்காப்பியர் கூறியுள்ள அம்மை முதலான எட்டினையும் தம் நூலுள் ஒழிபியலில் வனப்பு எட்டு என்று கூறிச் சென்றாலும், தொல்காப்பியர் செய்யுள் உறுப்பென்று கூறிய மாத்திரை, யாப்பு, மரபு, தூக்கு, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் என்னும் இருபத் தொன்றினை அவர்கள் உறுப்பென்று ஒதவில்லை. மேலும் தொல்காப்பியர் உறுப்பென்று ஒதாத தளையினைப்