பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 உரிய பொருள் எதுவோ அது உரிப்பொருளாகச் சொல்லப் படுகின்றது. தமிழ்ப்புலவர் இந்த உரிப்பொருளையே பாடு பொருளாகக் கொண்டுள்ளனர். தமிழ்ப்புலவர் உரிப் பொருளை முதன்மையான பாடுபொருளாகக் கொண் டுள்ளனர். தமிழ்ப்புலவன் உரிப்பொருளை முதன்மையான பாடுபொருளாக எடுத்துக்கொண்டு அதனை அதற்குப் பொருத்தமான இடங்காலங்களில் வைத்து, வேண்டும் கருப் பொருள்களை உரிப்பொருளுக்கு அடையாக நிறுத்தி, மரபமைந்த சொல்லால் அசையும் சீரும் அமைத்துக்கொண்டு, தொடையழகு பொருத்த, வண்ண ஓசை உண்டாக, உவமை முதலாக அணிகளுடன் மெய்ப்பாடு தோன்றப் பாடுவான். உரிப்பொருள் என்றால் என்ன? மக்களுக்குரிய பொருள் உரிப்பொருள் என்றோம். அது எது என்பதைக் கூறி அப்பொருள் மக்கட்கு உரிமை 4. எவ்வாறு என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வுரிப் பொருள் அகம் புறம் என இருவகைப்படும். அவற்றுள் அகமாவது புணர்தல், புரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும், கைக்கிளை, பெருந்திணை எனவும் ஏழு வகைப்படும். புறமாவது போர்த்தொடக்கமான நிரை கோடற் பகுதியும், பகையிடம் சேர்த்தும், எயில்வளைத்தலும், இருபெரு வேந்தரும் மைந்து கருதி ஒரு களத்துப் பொருதலும், வெற்றிவகையும், நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையுமென ஏழு வகைப்படும் என்பர். தொல்காப்பியர் பழைய தமிழ்ச் சமுதாயத்திற்கு whபக் கூறிய இவை, உலகில் எல்லாச் சமுதாயத்திற்கும் rற்குமாறு எங்ங்னம் எனில், காமம் என்பது அஃறிணை உயிர்க்கும் உயர்திணை மக்கட்கும் உரியதொரு பொருளாகும். தொல்காப்பியர் மக்களையே கருத்தில் வைத்துக் கொண்டு பொருளிலக்கணம் _றுவதால் அஃறிணை உயிரினத்தை நீக்கிவிட்டு, உயர்