பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திணை என்னும் மக்கள் சமுதாய காமத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். காமம் என்பது ஒருவரை விரும்புதல் என்று பொருள்பட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி மணவாழ்வில் ஈடுபடுதலையே காமம் என்கின்றோம். இக்காமத்தைக் காம நுகர்ச்சிக்குத் தகுதியற்ற இளமைப் பருவத்தாரிடத்தே நிகழ்வதென்றும் காம நுகர்ச்சிக்கு ஏற்ற பருவத்தாரிடத்தே நிகழ்வதென்றும் காமப் புணர்ச்சிக்குத் தகுதியற்ற முதுமைப்பருவத்தாரிடத்தே நிகழ்வதென்றும் பருவங்கருதி மூன்றாகப் பிரிக்கலாம். இன்னும் இக்காமத்தைச் சிறிதனவாய் நிகழும் காமம், ஒத்த அளவில் நிகழும் காமம், மிகவும் பெருக்கெடுத்தோடும் காமம் என்று அளவுகருதி மூன்றாகவும் பிரிக்கலாம். = இன்னும் இக்காமத்தை ஆடவர் மகளிர் என்னும், இருவரில் ஒருவர் மட்டும் விரும்புங் காமம்; இருவருமே ஒருவரை ஒருவர் விரும்பும் காமம், இருவருமே ஒருவரை ஒருவர் விரும்பாமல் நிற்கும் காமம் என விருப்பம் கருதி மூன்றாகவும் பிரிக்கலாம். இவற்றைத்தான் தமிழ்ப்புலவர் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனப் பெயர் வைத்தழைக்கின்றனர். தொல்காப்பியர் காமத்தினை மேற்கண்டவாறு பகுத்துக்கூறுவது எல்லா உலக மக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. கைக்கிளை என்றாவது சிறுமை பற்றிய காமம், ஐந்திணை என்பது ஐந்து பிரிவாக வழங்குதற்குரிய காமம். பெருந்திணை என்பது முதிர்ந்த காமம் என்று பொருள் படும். அவற்றுள் ஐந்திணை என்பது அன்பு முதலியன ஒத்த தலைவனும் தலைவியும் கூடும் குறிஞ்சி எனவும், தலைவியை விட்டுத் தலைவன் தொழில் காரணமாகப் பிரியின் அது பாலை என்றும், தலைவன் பிரிந்த பொழுது தலைவி ஆற்றியிருப்பது முல்லை என்றும், ஆற்றாமல் புலம்பியிருப்பது நெய்தல் என்றும், தலைவன் பரத்தை