பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 காரணமாகப் பிரிந்த பொழுது தலைவிக்கு உண்டாக்கும் பிணக்கு என்னும் ஊடல் மருதம் என்றும் கூறப்படும். அன்புடையவராகிய இருவருடைய வாழ்வில் எல்லா இடங் களிலும் அன்பே காணப்படும். அதுவும் ஒருவரை ஒருவர் பிரிந்து நின்றபொழுது இருவருடைய உள்ளத்திலும் ஆர்வவெள்ளம் கரைகடந்து ஓடும். அதனால் ஒத்த காமத்தை அlதாகப் பிரித்து வழங்குகின்றனர். கைக்கிளை பெருந்திணைகள் ஒத்த காமத்தைப் போல ஐந்தாகப் பிரித்து வழங்க முடியாதவையாம். ஏன் எனில்? ஒத்த காமத்தில் தலைவனும் தலைவியும் கூடுவது இன்பமாக இருக்கும்; பிரிதல் துன்பமாக இருக்கும்; ஆனால் கைக்கிளையில் புணர்வு ஒருவர்க்கு இன்பமாகவும் மற்றொரு வருக்குத் துன்பமாகவும் இருக்கும். அதுபோல் பிரிவு ஒருவருக்குத் துன்பமாகவும் மற்றொருவருக்கு இன்பமாகவும் இருக்கும். அதுபோலப் பெருந்திணையில் புணர்வு இருவருக கும் துன்பமாகவும், பிரிவு இருவருக்கும் இன்பமாகவும் இருக்கும். இக்காரணங்களால் கைக்கிளை ஐந்திணையை அlதாகப் பிரித்து வழங்கும் வழக்கமில்லை. தொல்காப்பியர் சிறுமை பற்றிய காமம் ஒத்த காமம் விவாக் காமம் என முறைப்படுத்தி, அவற்றுள் பிரித்து வழங்குதற்குத் தகுதியான ஒத்த காமத்தை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, கைக்கிளை எனவும்.ஒத்த காமத்தில் அதிணை புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும், ஒவ்வாக் காமத்தைப் பெருந்திணை எனவும் கூறி அகத்தினை ஏழு என்றும் கூறுகின்றார். இதனை, கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப _:று அகத்திணையியல் தொடக்க நூற்பாவால் உணரலாம். உலகில் நிகழும் எல்லாக் காம வகைகளும் இந்த ஏழுள் அ_ங்கும். புறத்தினை தொல்காப்பியர் புறத்தினையியலில் தொடக்கத்தே அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோருக்குப்