பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பொழிப்பாவது:- பொழிப்பெனப்படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப்பதுவே" (திவாகரம் - ஒலி - 90) என்பதாகும். வார்த்திகப் பொழிப்புரையாவது " பாடம் கண்ணழிவு உதாரணம் என்றிவை நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே" என்பதாகும் என்பர். அகப்பொருள் உரையாசிரியர் சொற்றொறும் சொற்றொறும் துணிபொருள் உரைத்தல் கற்றறி புலவர் கண்ணழி பென்ப என்பர். இறையனார் களவியலுரையாசிரியர் உரை நான்கு வகைப்படும் என்பர். கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத் திரட்டல், அகலங்கூறல் என. அவற்றுள், கருத்துரைத்தல் - சூத்திரக் கருத்தை உணர்த்தல். கண்ணழித்தல் - பதப்பொருள் சொல்லுதல். பொழிப்புரையைப் பொழிப்புத் திரட்டல் என்பர். அகலம் என்பது சூத்திரப் பொருளைத் து.ாய்மை செய்தற்குக் கடா விடை உள்ளுறுத்து உரைக்கும் உரை யெல்லாம் அகலவுரை என்பர். பிங்கல நிகண்டு கூறுவது பொழிப்புரை, விரித்துரை என இரண்டு. அவற்றுள் "பொழிப்புரை பிண்டம் பொருளதென்ப" (2071) விரித்துரை பதவுரை விரித்த சூரணை தொகுதி பகுதிப்பொருள தாகும் 0ே73) நன்னூல் கூறும் ஈரேழ் உரை பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம் விரிவு அதிகார துணிவு பயனோடு ஆசிரியவசனம் என்று ஈரேழுரையே (21)