பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கண்டோர் கட்டுரைப்போர் வேலன் விறலி ஊரவர் சேரி யோர் அயலோர் என்னும் இவரெல்லாம் நிகழ்த்துபவராவர். இதனைத் தொல்காப்பியர் கூற்று வகை என்பர். எட்டாவது கேள்வி மேலே கூறிய கூற்றினைக் கூறும்பொழுது அதனைக் கேட்பவரைக் கேள்வி என்று வீரசோழியம் கூறுகிறது. தொல்காப்பியர் கேட்போர் என்னும் செய்யுள் உறுப்பாகவே கூறுகின்றது. தொல்காப்பியர் பாணன் கூத்தன் விறலி பரத்தை அறிவர் கண்டோர் பார்ப்பார் பாங்கன் தோழி செவிலி என்ற கூறுகின்றார். (செய்யுளியல் - 196) ஆனால் வீரசோழிய உரையாசிரியர் உயர்திணையில் இவர் கேட்டார் என்றும், அஃறிணையில் இது கேட்டதென்றும் இரு வகையாகக் கொள்ள வேண்டும் என்பர். ஒன்பதாவது மொழிவகை இப்பாட்டு எந்தச் சொல்லினாலே செய்யப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து கூறுதல். உலக வழக்காகிய இயற் சொல்லாலா? செய்யுள் வழக்காகிய திரி சொல்லாலா? இவையிரண்டு அன்றி வடசொல்லாலா? திசைச்சொல்லாலா? என்று தெரிந்து கூறுவது. இதனைத் தொல்காப்பியர் மரபேதானும் நாற்சொல்லியலான் என்பர். பத்தாவது பொருள்கோள் தொல்காப்பியர் செய்யுள் உறுப்பு முப்பத்து நான்கில் 'பொருள்வகை என்று கூறி, அது இன்னதென்பதனைப் புலப்படுத்த சிறப்பு நூற்பாவும் கூறியுள்ளார். அந்நூற்பா, இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை யிழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொரு ளெனாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப என்பதாகும். இதற்கு இளம்பூரணர் "இன்பமும் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்று சொல்லப்பட்டவை வழுவுநெறியின்றி, இத்திணைக்குரிய பொருள் இப்பொருள் என்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் து _து