பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 இது போலவே ஏனைய திணைகட்கும் கூறப்பட்டுள்ளன. அந்தாவது சுட்டு ஐந்தாவதாகிய சுட்டு என்பது இடத்தைக் கருதியதாகும். இப்பாட்டு தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றில் இன்ன இடத்தைக் கருதி வந்தது என்று கூறுவது. இறையனார் களவியல் உரையாசிரியர் இதனை இடம் என்பர். அவர் கூறுவது: இடம் என்பது அவ்வாறு ஒருவர் கூற ஒருவர் கேட்கும் இடம் என்றறிவது. அவை தன்மை முன்னிலை படர்க்கை என்பன. அவற்றுள் யான் என்பது தன்மை, நீ என்பது முன்னிலை, அவன் என்பது படர்க்கை. அவற்றுள் இன்னது பற்றி வந்ததென்று அறிவது. தொல் காப்பியர் (களன்) என்ற ஒன்றைச் செய்யுள் உறுப்பாகக் கூறியுள்ளார். அதற்கு இளம்பூரணர் முதலிய உரையா சிரியரெல்லாம் வேறு பொருள் கருதிக் கூறுகின்றனர். இறையனார் களவியல் களனுக்குப் பதில் இடனைக் கூறுகின்றது. ஆறாவது இடன் வீரசோழியம் சுட்டின் வேறாக இடன் என்ற ஒன்றைக் கூறுகிறது. இடனாவது கைகோள் ஆகிய காமஒழுக்கம் நிகழும் அகவிடனும் புறவிடனும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் அகவிடனாவது, மனையும் வளாகமும் பற்றி வருவது, புறவிடனாவது மலையும் பழனும் சோலையும் கடலும் நெறியும் ஆறும் பற்றி வருவது. ஏழாவது கிளவி கிளவி என்றாலும் கூற்று, கூறுதல் என்றாலும் ஒன்றே. அக்கிளவி, | 1. நெஞ்சிற்குக் கூறுதலும், 2. வானை நோக்கிக் கூறுதலும் 3. கேட்டோர்க்குக் கூறுதலும் என மூன்று பிரிவாக உள்ளன. இக்கூற்று தலைமகன், தலைவி தோழி நற்றாய், தோழி செவிலி பாங்கன் பாணன்