பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 உரிப்பொருளும் கூறுதல் வேண்டும். இதனைத் தொல் காப்பியர் செய்யுள் உறுப்பென ஒதுவர். மூன்றாவது கைகோள் கைகோள்' என்பது ஒழுக்கம் என்று பொருள்படும். அது களவென்றும் கற்பென்றும் இருவகைப்படும். களவு என்பது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் திருமணச் சடங்காகிய கரணத்தினைச் செய்வித்துக் கொள்ளாமலேயே கூடியொழுகுவதாகும். கற்பாவது திருமணச் சடங்கை நிகழ்த்திக் கொண்டு அவர் கூடி வாழ்வது. இப்பாட்டு களவைக் கொண்டதோ கற்பைக் கொண்டதோ என்று ஆய்ந்து, இது இவ்வொழுக்கத்தைக் கூறுகின்றது என்று உரைத்தல், தொல்காப்பியர் இதனைச் செய்யுள் உறுப்பென்று கூறுகிறார். நான்காவது நடை நடையாவது ஒழுக்கம் என்று பொருள்படும். மேற் கூறிய களவு கற்பென்னும் ஒழுக்கத்தில் இந்த நடை முறை குறிஞ்சியைப் பற்றியது, பாலையைப் பற்றியது, முல்லையைப் பற்றியது, நெய்தலைப்பற்றியது, மருதத்தைப் பற்றியது எனப் பகுத்துணர்தல்,மேலே கைகோள் என்பது தொகை நடை என்பது வகையும் விரியுமாகும். தொல்காப்பியர் இந்த நடையை உறுப்பாகக் கூறவில்லை. மேற்கூறிய நடையில் குறிஞ்சி நடை தலைவன் தலைவியைக் கண்டு செப்பலும், அவள் அழகைப் புகழ்தலும், அவள் நாணுதலும், அவளைப் புணர்தலும், பிரியக் கருதுதலும், பிரிவின்மை பேசலும், பெருமைப் படுதலும், பெறுதற்கரிதென்றலும், ஊழ்வினையை வலியுறுத்தலும், தெய்வத்தைப் பேணலும், தோழனை நினைத்தலும் பிரிதலும் பின்பு அவ்விடம் அணுகலும், இடத்தொடு புலம்பலும், தலைவியை வினவலும் தலைவியைக் காண்டலும், புலம்பகற்றலும் ஆர்வமாய் நோக்கலும், நாணிக் கண் புதைத்துத் தலைவி இறைஞ்சுதலும், ஆற்றான் மொழிதலும் அஞ்சிய நோக்கமும், உவகையுடன் அவள் முறுவலித்தலும் ஆங்கவன் புணர்தலும் முதலிய பல நடைகள் கூற்ப்பட்டுள்ளன.