பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 றிட்டிகச் சொற்பொருள் எச்ச மிறைச்சி பயன்குறிப்பு கட்டக மெய்ப்பாடு காரணங் காலங் கருத்தியல்பே ஏற்றும் விளைவொ டுவம் மிலக்கண மேய்ந்த தொல்லோர் போற்றும் புடையுளா யேமொழி சேர்தன்மை யேயுமன்றி ஆற்றும் பொருடை வென்றா முரையல் லவற்றினுக்கு மாற்றும் உரையும் வகுக்கும் உரையும் மதித்தறியே இப்பாடல் இரண்டு அகப்பொருள் பாடல்கட்குக் கூறப்படும் உரைவகைகளை உரைக்கின்றன. அவ்வுரைவகை சட்டகமும், திணையும், கைகோளும், நடையும், சுட்டும், இடனும், கிளவியும் மொழியும், கோளும், உட்பெறு பொரு ளும், சொற்பொருளும், எச்சமும், இறைச்சியும், பயனும் குறிப்பும், மெய்பாடும், காரணமும், காலமும், கருத்தும், இயல்பும், விளையும், உவமமும், இலக்கணமும், புடையுரையும், மொழிசேர் தன்மையும், பொருளடைவும் என இருபத்தேழும் அகப்பொருளினும் உரையாம். அகப்புறப் பொருளுக்கும், புறப்பொருளுக்கும், புறப்புறப்பொருளுக்கும் ஏற்கும் உரை அறிந்து கொள்க. முதலாவது சட்டகம் என்பது மேற்கூறிய இருபத்தேழில் சட்டகம்' என்பது ஒன்று. சட்டகம் என்றால் உடம்பு என்பது பொருள். பலவகைத் தாதுக்களால் உயிர்க்கு இடமாக அமைந்த உடம்பு போல பல சொல்லால் பொருட்கு இடனாக இயற்றப்பட்ட பாடலே ஈண்டு சட்டகம் ஆகும். இவ்வகப் ப்ொருள் பாட்டு என்ன சட்டகம் எனின்? இது வெண்பா; இது ஆசிரியப்பா, இது கலிப்பா இது பரிபாடல் என்று கூறுவதாகும். இதனைத் தொல்காப்பியர் கூறவில்லை. இரண்டாவது திணை இவ்வகப் பொருள் எந்நிலம் பற்றி வந்தது? என்று வினாவின், இது குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து நிலத்தில் இன்ன நிலம் பற்றி வந்தது என்று கூறுதல் ஐந்து திணைக்குரிய முதலும், கருவும், தலைமையான