பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 தொல்காப்பியரைத் தவிர்த்து எவரும் திணைமுதலான பன்னிரண்டனையும் செய்யுட்கு உறுப்பாக ஒதியதாகத் தெரியவில்லை. இறையனார் களவியல், நம்பி அகப்பொருள் முதலிய அகப்பொருளிலக்கண நூல்கள் மட்டும் இவற்றை எடுத்துக்கூறி, இவை அகப்பொருள் பாடற்கு உரைகூறும் முறை என்று குறிப்பிடுகின்றது. வீரசோழியம் என்னும் இலக்கணநூல் இவற்றையும் இன்னும் பலவற்றையும் எடுத்துக்கொண்டு இவை அகப்பொருளுக்கு உரையாம். அகப்பொருளல்லாதவற்றிற்கு இவற்றிலே பலவற்றை நீக்கியும் சிலவற்றைக் கொண்டு உரைகூறுவதுண்டு என்று கூறுகின்றது. அவற்றைக் கீழே காண்க. அகப்பொருள் பாடல்கள் வீரசோழியம் கூறும் உரை முல்லை குறிஞ்சி மருதத்தொடு பாலை நெய்தலைந்தும் சொல்லும் அகமாம்; அதனுக் குரைதொரு சட்டகமோ டெல்லை நிகழு மிருபதோ டேழுள ஏனையவற் றொல்லை நிகழும் உரையும் அறிந்துகொள் நண்ணுதலே முல்லை குறிஞ்சி மருதம் பாலை நெய்தல் என்னும் ஐந்து நிலமும் அகப்பொருளுக்கு அடையாளம் எனக் கொள்க. இப்படியுள்ள அகப்பொருளுக்குச் சட்டகம் முதலாக இருபத்தேழு உரை உள ஒழிந்த அகப்புறப் பொருளுக்கும், புறப்பொருளுக்கும் என்பது புறப்புறப் பொருளுக்கும் ஏற்கும் உரை அறிந்து கொள்க" என்பது மேற்காரிகையின் உரையாகும். ஒத்த காமமாகிய முல்லை முதலான ஐந்து திணைக் குரிய பாடல்கட்கு மட்டும் சட்டகம் முதலான இருபத்தேழு உரைத்திறன் உள்ளன.ஏனைய அகப்புறம் முதலிய மூன்றற்கும் இவ்விருபத் தேழுள் பொருந்தும் உரையைக் கொள்க என்று மேற்பாட்டு கூறுகின்றது. சட்டகம் முதலான உரைத்திறன் சட்டக மேதிணை கைகோள் நடைசுட் டிடங்கிளவி ஒட்டிய கேள்வி மொழிவகை கோளும் பெறுபொருளென்