பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அகப் பாடல்களுக்கு உரை காண்பது தொல்காப்பியர் செய்யுளியல் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்பினைக் கூறும்பொழுது, தினையே கைகோள் கூற்றுவகை எனாஅக் கேட்போர் களனே காலவகை எனாஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை எனாஅ முன்னம் பொருளே துறைவகை எனாஅ _று ஒரு பன்னிரண்டினைக் கூறுகின்றார். இறையனார் களவியல், முன்னம், துறை என்னும் 1ண்டையும் நீக்கிவிட்டுத் தினையே கைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு பயனே கோளென் றாங்கப் பத்தே அகனைந் திணையும் உரைத்த லாறே என்று கூறுகின்றது. இந்நூற்பாவில் அதன் உரையாசிரியர் "இந்நூற்பா என்னுதலிற்றோவெனின், மேற் களவும் கற்பும் _ணர்த்தினார், இனி அவ்விரண்டும் பற்றி வருகின்ற பாட்டினை இக்கூறப்பட்ட பத்திலக்கணத்தாலும் உரைக்க வரை கூறுக) என்பது உணர்த்துதல் நுதலிற்று" என்று கூறு கிறார். அதனாலே இவை பாட்டிற்கு உரைகூறும் முறை என்று கருதவேண்டும். 1. யாப்பருங்கல விருத்தி "அகவல், அகப்பா, புறப்பா நாற்பா சித்திரம் உறுப்பு ஏந்திவையென ஆறுவகையாம் என்கின்றது. அவற்றுள் அகப்பா அகவலானது அகப் பொருளைத் தழுவி ஐயீருறுப்பினவாய் வஞ்சிவிரவாது வlது முடியும்" "அகப்பா அகவல், ஐயீருறுப்பின் ஆசிரி யம்மே. அவைதாம் முன்னும் பின்னும் சாங்கல் இன்றி, சென்னெறி மரபிற் சென்றிசைக்கும்மே" (கழகப் பதிப்பு. பக். „'ዛዕ). ==