பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 காரணம் குறிப்பின்றி நிகழ்தலின் இமை முன் கூறப்பட்டது GTool L_ЛГГ. இளம்பூரணர் (7) அளவை நிறுத்தளத்தல் பெய் தளத்தல் நீட்டியளத்தல் தெறித்தளத்தல் தேங்க முகந்தளத்தல் சார்த்தியளத்தல் எண்ணி அளத்தல் என அளவை ஏழு. கண்ணிமையாலும், கைந்நொடியோசை யாலும் எழுத்தினை அளப்பது சார்த்தியளத்தல் என்பர். "இளம்பூரணர் பொருளுணர்ச்சிக்குக் கருவியாக உள்ள நயத்தினைப் பல இடத்திலும் கூறுகின்றார். இந்நூற்பாவில் ஒற்றுமை நயம் வந்துள்ளது. "மெய்யின் வழிய உயிர்தோன்று நிலையே" என்பதனுள் வேற்றுமை நயம் கருதப்பட்டதென்பர். இளம்பூரணர் (18 நூற்பா) கலப்பினை பாலும் நீரும் போலக் கலந்த உடனிலைக் கலப்பும் விரல் நுனியும் விரல் நுனியும் தலைப்பெய்தாற் போல வேறுநின்று கலந்த கலப்பும் என இரண்டுவகையாகக் கூறி, மெய்யும் உயிரும் கலந்த கலப்பு விரல் நுனியும் விரல் நுனியும் கலந்தாற் போன்றதென்பர்.