பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

319 'எழுத்தெனப்படுப என்ற சிறப்பால் (நூற்பா - 17) அகரமுதல் முப்பதெழுத்தும் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் சிறந்த எழுத்துக்களாம். சிறவாத எழுத்துக்கள் அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் வன்பர். ஆனால் (2) எழுத்தோரன்ன என்றதால் குற்றியலு கரம் முதலிய மூன்றும் சிறவாத எழுத்தென்றே கருத்தமைத் தான் என்பர். முதல் நூற்பாவுள் அகரம் முதல்' என்று அகரஎழுத்து முதலாக ஒதப்பட்டுள்ளது. னகர இறுவாய்' என்று னகர எழுத்துப் பின் வைக்கப்பட்டது. இளம்பூரணர் அகரந் நானுமியங்கித் தனிமெய்களையும் இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகாரம் வீடு பேற்றிற்கேற்ற ஆண் பாலை உணர்த்துதற் சிறப்பாற் பின் வைக்கப்பட்டது என்பர். குற்றிகரக் குற்றுகரம் சார்பெழுத்தென வேறாதற்குக் காரணம் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் என்பர். (உ - து - உரை) மூன்றாம் நூற்பா, அஇஉஎஒ குற்றெழுத்து என்று கூறும் நூற்பாவாகும், அந்நூற் பாவுரையுள் இளம்பூரணர், "இவன் காரணம் பற்றியன்றிக் குறியிடான் ஆகலின் இது தன் குறுமையால் இக்குறி பெற்றது" என்பர். இவன் என்னுஞ் சுட்டுத் தொல்காப்பியரைக் கருதியதாகும். ஆனால் நூற்பாவுள், என்ப' என்னும் சொல் வந்துள்ளமை யால் குறில் என்பது தொல்லாசிரியர் வைத்த குறி என்றே கொள்ள வேண்டும். (4ஆவது நூற்பா) ஐகார ஒளகாரங்கட்குக் குறிலாகிய ()ணம் இல்லை எனினும் மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத்தெனப்பட்டன என்பர். தொல்காப்பியர் எழுத்திற்குக் கூறும் மாத்திரைக்கு அளவு கருவியாகக் கண்ணிமையையும் கைந்நொடியையும் கூறியுள்ளார். இளம்பூரணர் எழுத்தினை உண்டாக்க முயலும் தொழிலுக்கு இமைக்கும் தொழிலையும், ஒலிக்கு நொடித்துத் தோற்றுவிக்கும் ஓசையையும் உவமை கூறியுள்ளதாகக் கருதுகிறார். அந்நூற்பாவுள் இமையை முன் கூறியதற்குக்