பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 னாய் இருந்து கொள்வோன் கொள்வகை அறிந்து கொடுத் தல் வேண்டும். மாணவன் பாடங்கேட்கும் முறை 1. நெஞ்சு களனாகச் செவி வாயாகக் கேட்டவை கேட்டவை வல்லனாகி கேட்ட பாடத்தைப் போற்றிக் கொள்ள வேண்டும் 2. செல்வன் தெரிந்து கொள்ளும் ஆற்றலுடையவனாய் உண்மையை நோக்கி அறிபவனாய் பல உரையும் கேட்கும் விருப்பினனாய் இருத்தல் வேண்டும். 3. உலக வழக்கு செய்யுள் வழக்கு இரண்டையும் அறிந்து பாடம் போற்றுதல் கேட்டவை நினைத்தல் முன் கேட்டவற்றில் ஐயம் நிகழின் திரும்பக் கேட்டல் தன்னைப் போன்ற மாணவருடன் பழகல் தான் வினாதல் பிறர் வினாவியவற்றிற்கு விடை தருதல் என்னும் இவையெல்லாம் வேண்டும். இளம்பூரணர், அதிகார முகப்பில் அதிகாரத்தின் பெயர் அதற்கு என்ன காரணத்தாற் பெயர் வந்தது? என்பவனவற்றை வினா நிகழ்த்திக் கொண்டே விடை கூறுவர். இயல் முகப்பிலும் அவ்வாறே எழுதுவர். நூற்பா முகப்பில் இந்நூற்பா என்னுதலிற்று என வினாவிக் கொண்டு நுதலிய பொருளைக் கூறிவிட்டே உரை எழுதுவர். இளம்பூரணர், முதல் நூற்பா உரையுள், எழுத்து எனைத்து வகையினான் உணர்த்தினான் என வினா நிகழ்த்திக் கொண்டு, எட்டு வகையானும், எட்டிறந்த பல வகையானும் உணர்த்தினான் என்பர். இப்படி பகுத்துக் கொண்டு உணர்த்துவது திறனாய்வு முறையாகும். நூன்மரபில் உணர்த்துவ தனிநின்ற எழுத்திற்கும் மொழிமரபில் உணர்த்துவன மொழியிடை எழுத்திற்கும் உள்ள இலக்கணமாம் என்பது இளம்பூரணர் கருத்து.