பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 சிறந்திருந்தும், இன்திங் கரும்பு போல, இடையிலே பொருள் சிறந்தும், வன்தாள் பலாப் போல, முதலும் இடையும் பொருள் சிறந்தும், நற்பூ அசோகு போல, நடுவண் பொருள் சிறந்தும், விற்பூட்டுப் போல, மேலும் கீழும் பொருள் சிறந்தும் இரும்புனலாறு போல பாட்டின் எல்லா இடமும் பொருள் சிறந்தும் விளங்குவது என்பர். பாட்டிலே பொருள் சிறந்திருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அதனை வகைசெய்துணர்தலே இப்பொருள் கோளாகும் என்றும் ஈற்றிலே சொல்லியுள்ள பொருள் அடைவு வேறு என்றும் இவ்வுரையாசிரியர் கருதுகிறார். பதினொன்றாவது உட்பெறு பொருள் ஒரு பொருளைச் சொல்லும்பொழுது மற்றொரு பொருளும் வந்து நிற்பது உட்பெறு பொருளாம் என்பர். சொற்பொருள் சொற்பொருள் என்பது தனிச்சொல் பொருள் உணர்த்தல் தொடர்ச் சொற் பொருளுணர்த்தல் என இரு வகையாம். தனிச்சொல் எல்லாம் தம்பொருளை உணர்த்து வதும் ஆகுபெயர்ப் பொருளை உணர்த்துவதும் என இரண்டாம் புணர்மொழி முன்மொழியும் பின்மொழியும் அனைத்து மொழியும் அன்மொழியும் என நான்கு வகையாற் பொருள் உணர்த்தும். ாச்சமாவது சோல்லெச்சம் குறிப்பெச்சம் என இரண்டு வகை என்பர் சொல்காப்பியர் வீரசோழிய உரையாசிரியர் பெயரெச்சம் வினையெச்சம் என்பர். பதினான்காவது இறைச்சி இறைச்சிப் பொருள் என்பது கருப்பொரு ாகும்.அகப்பொருட்பாட்டில் வந்துள்ள பொருள்களைப் பிரித்தால் முதற்பொருளென்றும் கருப்பொருளென்றும் உரிப் பொருளென்றும் மூன்று வகையாக இருக்கும். அவற்றுள் முதற்பொருளைத் திணை என்பதிற் கூறினார். உரிப்பொருளை