பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நடை என்பதிற் கூறினார். கருப்பொருளை இறைச்சிப் பொருள் என்று கூறுகின்றார். இறைச்சிப்பொருள், 1. அங்க இயற்பொருள் 2. தினைநிலைப் பொருள் 3. வன்புலப் பொதுப்பொருள் 4. மென்புலப் பொதுப்பொருள் 5. பெருமைப் பொதுப்பொருள் 6. விருந்துப் பொதுப்பொருள் என ஆறுவகையாகப் பிரிக்கப்பட்டு வழங்கும் என்பர். அங்கியற் பொருள் அங்கியற் பொருளாவது அந்நிலத்தில் ஓர் அங்கமாகக் கருதப்படும் பொருள் என்க. அவை குறிஞ்சி நிலத்திற்குச் சந்தனமும் பொன்னும் வெள்ளியும் முதலியன. நெய்தல் நிலத்திற்கு உப்பும் இப்பியும் நந்தும் அலவனும் வலையும் முதலியன. பாலை நிலத்திற்குச் சீழ்கு நாய் குருவி சிள்வீடு அறுபுள்ளி கோம்பி முதலாயின. மருதநிலத்திற்கு கரும்பு, வாழை , தெங்கு முதலாயுள்ளன. முல்லை நிலத்திற்கு பூவை, பூனை, தும்பி, காவளை கார் போகி முதலாயுள்ளன என்பர். தினைநிலைப் பொருளாவன குறிஞ்சிக்கு மூங்கில் மஞ்ஞை வேங்கை செங்காந்தள் இலவம் தேன், தினை, யானை இவற்றுடன் முருகனும் பாலைக்கு அகில், வேடர் கலை செந்நாய் மருந்து குறும்பர் என்னும் இவற்றுடன் கன்னிகையாகிய தெய்வமும், முல்லைக்கு இடையர் முதிரை முல்லை கொன்றை ஆனிரை, குருந்தம் தோன்றி புன்கு என்னும் இவற்றுடன் திருமாலும் மருதத்திற்குச் செந்நெல், எருமை, நீர்நாய், மகன்றில், கடையர் கடைசியர், செங்கழுநீர் என்னும் இவற்றுடன் இந்திரனாகிய தெய்வமும் நெய்தலுக்கு மீன் திமிங்கிலம், புன்னை கண்டல், அன்னம். சுறா, உப்பு முதலை துளையர், கைதை இவற்