பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 பதினெட்டாவது காரணம்: இப்பாட்டு தோன்று வதற்கு இது காரணம் எனக் காரணம் கூறுவது. காலம் என்பது யாண்டு முதலான இதற்கு இக்காலம் பொருந்துமெனக் கூறுவது.அன்றியும் இறப்பு நிகழ்வு எதிர்வு எறும் காலம் உரைத்தலும் ஒன்று. கருத்துரை 1 அறிதல், 2. அறியாமை, 3 ஐயுறல் என மூன்று வகையில் வரும். இவை, 1. அறிந்தறியாமை, 2 அறிந்தவை ஐயுறல், 3. அறியாதது அறிதல், 4. ஐயுற்றில்லாமை எனவும் வரும். இயல்புரை இயல்புரை என்பது, இன்ன இடத்தில் இன்னது விவா ன்னாது, என்பதைக் கூறுவது. ԱԱ/ து றுவது விளைவு 'விளைவு' என்பது முன்னே கூறிய பயனைப் போலவே தோன்றி, தாம் விரும்பியதை விளைப்பது விளைவெனப்படும். அது 1. இடையூறிலாமை, 2. இன்பம், புணர்ச்சி, 3. நெடு நிலப்படாமை, 4. கற்பு, 5. காவல், 6. கடன், 7 நாணம், 8. இற் செறிந்திருக்கை, 9. இருஞ்சுரம் போதல், 10. பாசறை முடித்தல், 1. பார்த்தலின் விழவு, முதலியனவாக வரும். „... Gn/60)LO அகப்பொருள் பாடலில் வரும் உவமை புகழும், பழியும், நன்மையும் கருதி ஒப்புமை கூறப்பட்டு வரும். அவ்வுவமை கண், செவி, மூக்கு நா, மெய், மனம் எனச் சொல்லிய ஆறினும் வரும். இவ்வாறுடன் புகழ் பழி நன்மை என்ற மூன்றையும் உறழப் பதினெட்டாம். அவற்றுள், கண்ணின் ஒப்பு வடிவு, வண்ணம் பற்றி வருவனவாகும். செவி எழுத்தின் ஒலியாலும் எழுத்தின் ஒலியாலும் வரும் மூக்கு நறுநாற்றம் தீநாற்றம் பற்றி வரும் நா அறுவகைச் கவையொப்புமை பற்றி வரும். உடம்பின் ஒப்பு எண்வகை மாறு பற்றி வரும். மனம் வினை, பயன், குலன், குணம்,