பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 அளவு, நிறம், எண் என்னும் ஏழினைப் பொறியுதவி கொண்டு நாடலின் வரும். வினை, பயன், குலன், குணன், அளவு, நிறம், எண் என மொழிந்த ஏழுடன் முதலும் சினையும் ஏனைய பண்பொடு பத்தினையும் கொண்டு ஐவகையாக உவமையைக் கூறினர் (குறிப்பு: இங்கே ஐவகை என்பது சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடு பொருள் என்னும் ஐவகையாகுமா?) இல்பொருட் கேள்வி.துணிவை முறையறிந்து கூறுக. உவமை: 1. பாட்டில் கூறப்பட்ட பொருளோடு கூட்டி நோக்கிப் பொருள் உணர்த்துவதாயும் 2. புனைந்துரையாய் வந்து அழகு செய்தும், 3. அல்லது இருவகை இயல்பும் ஏற்றும் வரும். ஒப்பிக்கப்படும் உவமமும் பொருளும் இரண்டாகாமல் சொல்லுவான் காதலால் ஒன்றாகியும் (உருவகமாகியும்) வரும். ஒருகுணம் ஒப்பிக்கப்படாமல் இரண்டு மூன்று குணங்கள் ஒப்பிக்கப்படும். முடிக்கப்படுவதும் முடிவதும் ஆகிய இரண்டில் ஒன்று மிகுகுணம் அடுக்கிவரின் சொல்வது கேட்போர்க்குத் தக்கன வாயிருக்கவேண்டும் என்னும் விதிப்படி உணர்தல் வேண்டுவதை கண்ணினாலே காட்டுவது போல் காட்டுவனாயின் அது அறிவுடைமையாம். இலக்கணம்: இலக்கணம் என்பது சட்டகம் முதலியன எல்லாவற்றிற்கும் இலக்கணம் கூறுவது. புடையுரை. பாட்டினில் உணர்த்தப்படும் பொருளன்றி இன்றியமையாத புறப்பொருள்களையும் கொண்டுவந்து கூறுதல். மொழிசேர் தன்மை: சொல்லின் இயல்பு உணர்தல். பொருள் அடை பொருள் அடைவு என்பது பாட்டிற்கும் பொருள் கூறும் முறை. அது அளைமறி, மொழிமாற்று, கொண்டுகூட்டு, நிரனிரை, சுண்ணங்கோடல்.