பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 னிருந்து தம் மனையகத்திற்கு வேண்டுவனவற்றைச் செய் திருப்பர். ஒர் யாண்டாவது தமிழருக்கு மேற்கூறியவாறு வீட்டில் தங்கியிருந்து மனையறம் நடாத்துவதற்கு ஆறு திங்களும், வேற்றுநாட்டில் பிரிந்திருந்து தொழில் செய்வதற்கு ஆறு திங்களுமாகப் பயன்படும் முறையை நோக்கி விக்கிராமாதித்தன் கதை எழுதப்பட்டது போலும், அவன் தன்நாட்டில் ஆறு திங்களும், வேற்றுநாட்டில் ஆறு திங்களும் வாழ்ந்தான் என்று அக்கதையில் எழுதப் பட்டுள்ளது. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் வழியில் வந்த மாங்காட்டு மறையவனை மதுரை செல்வதற்கு நல்லவழியைக் கூறு எனக் கேட்ட கோவலனுக்கு அம்மறையவன் கோந்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தாலைந் திருகத் தம்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும் காலை எய்தினர் காரிகை தன்னுடன் என்றும் கூறியுள்ள பாடற்பகுதியில் வேனிற்காலத்தொடு வெங்கதிர் கூடித் தன்னலம் மாறுபட்ட தன்மையினால், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுயர் செய்யும் பாலை என்ற வடிவத்தைக் கொள்ளும் காலமாக உள்ளது என்று இளங்கோவடிகள் முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலையாதலை அழகாகக் கூறியுள்ளார். இவ்விடம் அறிவுநிலை, கலைநிலை என்னும் இரண்டும் கலந்து காட்சியளிக்கிறது. பாலையை நடுவுநிலைத் திணை என்றதற்கு நச்சினார்க்கினியார் கூறும் காரணம் பாலை என்பது அகனைந்திணையில் ஒன்றாகும். அகனைந்திணைக்கு நடுவண் ஐந்திணை என்று பெயர்