பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 உண்டு. அது கைக்கிளைக்கும் பெருந்தினைக்கும் நடுவண் நிற்பதால் வழங்கப்பட்ட பெயராகும். ஆனால், பாலையை நடுவண் ஐந்திணையில் நடுவனது (அகத்திணை - 2) ான்றும், நடுவுநிலைத்தினையே (அகத்திணை - 11) என்றும் தொல்காப்பியனார் வழங்குகின்றார். இதற்குரிய காரணத்தை இளம்பூரணர் விளக்கவில்லை. ஆனால், நச்சினார்க்கினியர், 'அப்பாலை ஏனைய போல ஒருபாற்படாது நால்வகை நிலத்திற்கும் உரியனவாகப் புலனெறி வழக்கம் செய்யப்பட்டு வருதல் பற்றிப் பாலைக்கு நடுவனது என்னும் பெயர் ஆட்சியும் குளிறும் காரணமாகப் பெற்ற பெயர் பின்னர் 'நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு என ஆள்ப. (1) புணர்தல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும் (2) நால்வகை நிலத்திற்கி டையிடையே "முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலை என்பதோர் படிவங் கொள்ளும்" என முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும் (3) நடுவண தாகிய நண்பகற்காலம் தனக்குக் காலமாகலானும் (4) புணர்தற்கும் பிரிதற்கும் இடையே பிரிவு வைத்தலானும் (5) உலகியற் பொருளான அறம் பொருள் இன்பங்களுள் நடுவணதாகிய பொருட்குத் தான் காரணமாகலானும் நடுவனது எனக் குணம் காரண மாயிற்று" என்பர். ஐந்து தினையுள் நடுநாயகம் பாலை ஐந்து திணையை வழங்குமிடத்து முல்லை முதலியன வற்றை முதலில் வைத்துப் பல முறைப்படிச் சொன்னாலும் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற முறையில் வழங்குவதே தகுதியாக இருக்கும். என்னை எனில்? தலைவன் தலைவி இருவரும் கூடுவது குறிஞ்சியாகும். அடுத்துத் தலைவியைத் தலைவன் பிரிதல் பாலையாகும். தலைவன் பிரிந்த இடத்துத் தலைவி ஆற்றியிருப்பது முல்லையாகும். ஆற்றாமல் அவள் இரங்கின் நெய்தலாம். தலைமகன் பரத்தையிற் பிரிந்தபொழுது தலைவி ஊடுவாள் அது மருதமாம். இவற்றிள் குறிஞ்சி இருவர் செயல். பாலை தலைவன் செயல், முல்லையும் நெய்தலும் மருதமும்