பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தலைவி செயல். எனவே இருவர் செயலாகிய குறிஞ்சிக்கும் தலைவி செயலாகிய முல்லை நெய்தல் ஊடல்கட்கும் இடையே பாலை நிற்றலால் இதனை நடுநாயகம் என்று கூறுவது நன்கு பொருந்தும். தொல்காப்பியனார் ஐந்திணைக் காமத்தில் நிகழ்வன வற்றை நோயும் இன்பமும் இருவகை நிலையில் என்று இரண்டாகப் பகுத்துள்ளார். ஐந்திணையுள் தலைவனும் தலைவியும் கூடி வாழ்வது இன்பமாகும். தலைவியைத் தலைவன் பிரிவது துன்பமாகும். பிரிந்த தலைவி ஆற்றியிருப்பது துன்பமாகும். ஆற்றியிராமல் இரங்குவது பெருந்துன்பமாகும். தலைவனுடைய பரத்தைமை ஒழுக்கம் காரணமாகத் தலைவி ஊடிக் கொள் வதும் துன்பந்தான். உலக வாழ்வில் இன்பம் சிறிது; துன்பம் பெரிது என்பதை மேற்கூறியவை எடுத்துக்காட்டுகின்றன. எனவே ஐந்திணைக் காமத்தில் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. ஆனால் துன்பமே அதிகம். துன்ப இலக்கியத்திலே சுவை மிகுதி அகனைந்திணை இலக்கியப் படைப்பில் அன்புடைய இருவர் கூடி வாழும் இன்ப நிலையைப் பற்றிப் பேசினால் அது கற்பவர்க்கு இனிமையைத் தருவதாயிருக்கும். ஆனால், அன்புடைய இருவரில் தலைமகள் பிரிதலையும், அப்பொழுது தலைவி தன் துன்பங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு ஆற்றியிருத்தலையும் அவள் ஆற்ற முடியாத நிலையை உடையவளாய் இரங்குதலையும், ஊடி வருந்துதலையும் வைத்து இலக்கியம் எழுதப்பட்டால், அவ்விலக்கியம் மிகமிகச்சுவையுடையதாயிருத்தலை உணர்கிறோம். இதற்குக் காரணமென்னவெனில், இருவரும் பிரிந்துறை நிலையில் ஒருவர் மேல் ஒருவர்க்கு அன்பு மிகுந்து தோன்றுவதேயாகும். ஒருவரை ஒருவர் மிக விரும்பியிருக்கும் உள்ளநிலை அன்பு மிகுந்து தோன்றுவதேயாகும். ஒருவரை ஒருவர் மிக விரும்பியிருக்கும் உள்ளநிலை பாலைத் திணையில் நன்கு தோன்றும். அகனைந்திணையில் பாலை, முல்லை, நெய்தல்,