பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 இன்பமாகிய காரியத்தை விழைந்து, வினை முடித்தலாகிய காரணத்தை விரும்புபவன் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், வினைமுடித்தலாகிய காரணத்தை விரும்பாமல் இன்பமாகிய காரியத்தை மட்டும் விரும்புபவன் யாதும் எய்தான் என்பதும் பெற்றாம் என்று இரண்டு கருத்தினை எழுதிக் காட்டுகிறார். எனவே திருவள்ளுவர் இன்பமாக இருக்கமட்டும் விரும்பி, ஆனால் வருத்தித் தொழில் செய்தலை விரும்பாத மக்கள் ஒருவகையினரென்றும், எப்பொழுதும் வருந்தித் தொழில் செய்தலையே விரும்பித் தம் இன்பத்தைக் கருதாத மக்கள் மற்றொரு வகையினரென்றும் இரண்டு வகையின ராகப் பிரித்துக் கொள்ளுகின்றனர். இவருள் இரண்டாமவரே பிறர்க்குப் பயன்பட வாழக் கருதுபவராவார். வினையே ஆடவர்க்கு உயிர் என்றபடி ஆக்கமான வினைகளை வெளி யுலகிற் சென்று செய்தலை விரும்பிய ஆடவர் தம் அன்புடைக் காதலியை இல்லிருத்திப் பிரிவர். அப்பிரிவு பாலைக்கு உரிப்பொருளாயிற்று. மற்று, தமர் வரைவு உடன்படாது காரணத்தால் தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு பிரிவன். இப்பிரிவையும் பாலையும் உரிப்பொருளென்றே தொல் காப்பியர் ஒதுகின்றார். களவொழுக்கத்தில் ஒழுகிய தலைமகன் தலைவியை மணந்து கொள்ள முயன்றான். தமர் உடன்படவில்லை. அதனால் அவன் தலைவியை உடன்கொண்டு வேண்டியதாயிற்று. இது, இல்வாழ்விற்குச் சிறந்த துணையான இல்லாளைத் தருதற்கேதுவான பிரிவாயிற்று. தலைமகனுடைய பிரிவுக்கூற்றை எடுத்தோதுகின்ற ஒன்றாத் தமரினும் என்னும் நூற்பா தலைமகளை உடன்கொண்டு தமர்வயிற் பிரிதலையே முதலாக வைத்து ஒதுகிறது. அடுத்து பொருள் ஈட்டவும் அறப்புறம் காத்தற்காகவும் துாது உரைத்ததற்காகவும் வேந்தர்க்கு உற்றுழி உதவு வதற்காகவும் பகைதணி வினைக்காகவும் தலைவன் பிரிந்து செல்வான் போன்ற செய்திகள் அந்நூற்பாவில் அடுத்துக் கூறப்படுகின்றன. எனவே,