பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341 நாளும் நாளும் ஆள்வினை மழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையாற் புகழென என்பதைக் கருதியும், கேள்கே டுன்றவும் கிளைஞர் ஆரவும் கேளல் கேளிர் கெழிஇயினர் ஒழுகவும் ஆள்வினைக் கெதிரியே ஊக்கமொடு புகல்சிறந்து என்றவாறும் ஆள்வினை கெடாமல் ஆள்வினை சிறக்கக் கருதி வினையினையே தமக்கு உயிராகக்கருதும் ஆடவர் தலைவியை இல்லிருக்கப் பணித்துப் பிரிந்து வேற்றுநாடு புகுந்து பயன்தரும் பல்வகை வினைகளை நன்கு முடித்து வந்து தம் வாழ்க்கைத்துணைவி, புதல்வர், கேளிர் முதலான வர்க்கு உதவுபவராக இருந்து வாழ்வதற்கு ஏதுவாயிருப்பது பாலைத்திணை என்பதைக் கருதும் பொழுது இதன் சிறப்பு நமக்கு நன்குபுலனாகின்றது. и ПГо. Т. , எனவே, அகனைந்திணையிற் சிறந்தது பாலைத்திணை என்பதையும் அது உலகியல் வாழ்வதற்கு முதலான வினைக் கருவை உடையதென்பதையும் மேலே ஆராய்ந்து கண்டோம். அன்புடைய ஒருவனும், ஒருத்தியும் கூடி வாழத் தொடங்கினர்; அவர்தம் குடும்பத்தை நன்கு நடத்தவும், உற்றார் உறவினர்க்கு உதவவும் அறம் செய்யவும், புகழ்பட வாழவும் எண்ணினர். இவற்றிற்கெல்லாம் பொருள் வேண்டுமல்லவா? தலைவியை இல்லிருந்து அங்கு செய்ய வேண்டிய செயல்களைச் செய்து கொண்டிருக்குமாறு கூறிவிட்டுத் தலைமகன் பொருளிட்டும் வினையை மேற்கொண்டு பிரிவன். ஆறனும் ஈகையும் அன்பும் கிளையும் புகழும் இன்பம் தருதலில் புறம்பெயர்ந்து தருவது துணிந்தமை பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருளே என்னும் பாட்டு பொருள்மேற் பிரியக் கருதிய தலைமகன் கூற்றாகும். தலைமகன் பொருள் வருவாயிற் சிறந்தவனா