பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 யிருப்பினும் உயர்ந்த நூல்களைக் கற்பது கருதியும் அறம் புறத்தைக் காப்பது நினைந்தும், நாட்டிற்குப் பகைவரால் ஏற்பட்ட ஏதத்தை நீக்கிப் பாதுகாக்கக் கருதியும் துது போதலைத் துணிந்தும் அரசன் ஒருவனுக்கு உற்றுழி உதவக் கருதியும் இவை போன்ற வெவ்வேறு வினையாக்கங் கருதியும் தலைமகன் தலைவியைப் பிரிவன். இது பாலை. பிரிந்த தலைமகன், தான் செல்லும் வழியின்னாமை முதலானவற்றிற்கெல்லாம் சிறிதும் அஞ்சாதவனாய் புறத்தே சென்று வினையிலே கருத்தை வைத்தவனாய் மெய்வருத்தம் பாராமலும் பசியைக் கருதாமலும் கண்ணுறங்காமலுமிருந்து, வினைத்துய்மை வினைத்திட்பம் உடையவனாய்த் தொழில் புரிவன். செய்த தொழிலில் மற்றவரைக் காட்டிலும் வெற்றி பெற்று விளங்குவன். இதனைத்தான் தொல்காப்பியர் புறத்திணையியலில் வாகைத்திணை என்று கூறுகின்றார். வினை கருதித் தலைவன் தலைவியைப் பிரிவது அகனைந்திணையில் பாலை என்று கூறப்படுகிறது. பிரிந்து அவன் புறத்தே சென்று வினை புரிந்து, வினை வாய்க்கப் பெற்று வெற்றியுடையவனாய் விளங்குவது புறத்திணையில் வாகை என்று கூறப்படுகின்றது. இந்த இயைபினால், தொல் காப்பியர் புறத்திணையியலில் வாகை தானே பாலையது புறனே என்று கூறுகின்றார். அகனைந்திணை அனைத்தும் மக்களுக்கே உரிய காமமாகும். தொல்காப்பியர் 'மக்கள் நுதலிய அகனைந் திணையும் என்று கூறுதலைக் காண்க. இங்கே மக்கள் என்பது அந்தணன் அரசன் வணிகன் வேளாளன் ஆகிய எல்லா மக்களையும் குறிக்கும். எல்லா மக்களுக்கும் உரிமை பூண்ட குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலிலிருந்து அரசர்க்குரிய போருணர்ச்சியாகிய வெட்சியும் வஞ்சியும் உழிஞையும் தும்பையும் தோன்றும் என்று கூறிய தொல் காப்பியர் வாகைத்திணையை அரசர்க்கே உரித்தாக்கிக் கூறாமல், எல்லா மக்களுக்கும் உரிய பாலைத்திணையின் புறனாய் எல்லா மக்களுக்கும் உரிய வாகைத்திணை தோன்றும் என்று கூறியுள்ளார்.