பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பேராசிரியர் உரைத்திறன் தோற்றுவாய் தொல்காப்பிய உரையாசிரியருள் பேராசிரியரும் ஒருவர். இவர் பொருளதிகாரத்துள் மெய்ப்பாடு உவமம் செய்யுள் ம்ரபு என்னும் நான்கு இயல்களுக்கு உரை எழுதி யுள்ளார். நச்சினார்க்கினியர் பல இடங்களில் இவர் உரையைத் தழுவியே உரை எழுதியுள்ளார். அத்தகைய இவர்தம் உரைத்திறனைப் பார்ப்போம். பேராசிரியர் 1. முன்னே உரை எழுத வேண்டிய இயல் அல்லது நூற்பா இவற்றைத் தந்து, இவை கருதிய பொருள் இன்னதென்றுரைப்பர். இது நூல் உத்தியுள் முதற்கண் நிற்கின்ற நுதலிய தறிந்துணர்த்தல் என்னும் உத்தியாகும். எடுத்துக்காட்டு: இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்து, மெய்ப்பா டென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த் தாயிற்று, ஒத்து நுதலியதும் மெய்ப்பாடு உணர்த்துதல் என்பது பெற்றாம். என்றும் இதன் தலைச் சூத்திரம் என்னு தலிற்றோவெனின் அம்மெய்ப்பாடு பிறர் வேண்டுமாற்றான் இத்துணைப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. 2. எடுத்துக்கொண்ட பொருள் இயலாயின் அந்த இயலின் பெயர்க் காரணத்தை விளக்குவர். இயலின் இயைபு உரைப்பர். (எ-டு) மெய்ப்பா டென்பன சில பொருள் உணர்த் தினமையின் மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்து மேல் ஒத்தினோடு இவ்வோத்தினிடை இயைபு என்னையோ வெனின் மேலைஒத்துக்களுள் கூறப்படும். அகத்தினை புறத்திணை ஒழுகலாற்றிற்கும் ஒப்பு, உரு வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய் வேட்கை, நுகர்வு எனவரும் காட்டலாகாப் பொருள் என்றவற்றிற்கும் பொது வாகிய மனக்குறிப்பு இவ்வியலில் கூறும் நகை முதலியன