பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 வாகலின் இவற்றை வேறாகப் பிரித்து ஓரினமாக்கி மெய்ப் பாட்டியலென வேறோர் ஒத்தாக வைத்தமையின் எல்லா வற்றோடும் இயைபுடைத்தாயிற்று. 3. எடுத்துக்கொண்டது நூற்பாவாயின் அதன் சரியான பாடத்தை எழுதித் தொகுத்துக் கண்ணழித்து உரை கூறுவர். (எ-டு) "பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப" (இதன் பொருள்) பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் - முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்பவிளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும். கண்ணிய புறனே நானான்கு என்ப - அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி அடங் கும் நாடக நூலாசிரியர்க்கு (எ-று). இந்நூற்பாவைத் தனித்தனிச் சொல்லாகக் கண்ணழிக் காமல், இரண்டே பகுப்பாகத் தொகுத்துக் கண்ணழித்துக் கொண்டார். - 'பண்ணை’ என்றால் விளையாட்டு என்பது நேரான பொருள். ஆனால் ஆசிரியர் பண்ணை என்னும் சொற்கு விளக்கமாக 'முடியுடை மன்னரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப விளையாட்டு என்று மிக விளக்கமாக உரை எழுதியுள்ளார். பண்ணைத் தோன்றியவை முப்பத்திரண்டு பொருளும் முதனுரலாற் சொல்லப்படுவன போலும். அவற்றைப் பதினாறாகக் கருதுவது நாடக நூல் போலும். 4. பேராசிரியர் உரையுள் விளக்கம் கூறுதல் என்ப தொன்று. அது பலவகையில் அமைந்திருக்கும். பொழிப்பு, அகலம், நுட்பம், எச்சம் என்று நான்கு வகையான உரையுள் நுட்பம் என்பது ஒன்று. அது வினாவும் விடையுமாக அமைந்து பொருளை விளக்கும். (எ-டு) முப்பத்திரண்டாவன