பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 'யாவை எனின்? என்று வினாவிக் கொண்டு'ஒன்பது சுவையுள் உருத்திரம் ஒழித்து ஒழிந்த எட்டனையும் கூறுங்கால் சுவைக்கப்படும்பொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துட்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புப் பிறந்த உள்ளத்தால் கண்ணிரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியனவாய் உடம்பின்கண்வரும் வேறு பாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை எட்டோடும் சுட்டி ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்தி ரண்டாமென்பது. எனவே ஒவ்வொரு சுவையும் சுவைப் பொருள், சுவையுணர்வு, குறிப்பு, விறல் என நான்காயின. என்று விளக்கம் கூறுகின்றார். சுவைப்பொருளுக்கு விளக்கம் - சுவையுணர்வுக்கு விளக்கம் 5. "இருவகை நிலத்தின் இயல்வது சுவையே” என்பது செயிற்றிய நூற்பா. இதற்குப் பேராசிரியர் முதலில் தன் கருத்தைக் கூறுகிறார். சுவைப் பொருளைச் சுவையுணரும் பொறி கூடினாலல்லது சுவை தோன்றாது என்பாலெனின், வேம்பு என்னும் பொருளும், நாவென்னும் பொறியும் தலைப்பெய்துழியல்லது கைப்புச்சுவை பிறவாதது போல, அதனால் நகை முதலானவற்றுக்கு ஏதுவான பொருளைக் கண் முதலிய பொறி தலைப் பெய்தபொழுதே நகை முதலிய சுவை பிறக்கும். இக்காரணத்தால் இருவகை நிலத்தின் இயல்வது சுவையே என்று செயிற்றியம் கூறுகின்றது என்பர். ஆனால் இளம்பூரணர் நகையே அழுகை, என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திர உரையில், " மெய்ப்பா டென்பது யாதோவெனின்? "உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே" எனச் செயிற்றியினார் ஓதுதலின், அச்ச முற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத் தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாந்தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும்" என்பர். பேராசிரியர் இதனை மறுக்கின்றார். இனி இருவகை நிலன் என்பன உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதலன்றோவெனின், (மறுப்பு) சுவை